மதுரை: மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் நேரலையில் வந்த நித்யானந்தா!

0

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், அங்கு வரும் மக்களை தம் பக்கம் ஈர்க்கும் வகையில் நித்யானந்தா ஆசிரமத்தினர் சில ஏற்பாடுகளை செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

பிரசாதம் வாங்க முண்டியடித்த மக்கள்

பிடதியில் ஆசிரமத்தை வைத்திருந்த நித்யானந்தா 10 வருடங்களுக்கு முன்பு, மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனம் என்று அப்போதைய ஆதீனம் அருணகிரிநாதரால் அறிவிக்கப்பட்டார். அதன் பின்பு அதை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்த, நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கலாக, பின்பு மதுரை ஆதீனமே, இளைய ஆதீன அறிவிப்பை வாபஸ் வாங்கினார். அதை எதிர்த்து நித்யானந்தா வழக்கு தொடர்ந்தது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்த நிலையில், பல்வேறு வழக்குகளால் நாட்டைவிட்டு வெளியேறிய நித்யானந்தா, சில ஆண்டுகளுக்கு முன்பு கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக இணையதளம் மூலம் அறிவித்தார். அவ்வப்போது அங்கிருந்து அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

நித்யானந்தா ஆசிரமம்

ஆனாலும், பாரம்பர்யம் மிக்க மதுரை ஆதீன மடத்தின் மீது அவருக்கு கவனம் இருந்துகொண்டே இருக்கிறது. அதனால்தான் ஆதீன மடத்துக்கு அருகிலயே ஒரு இடத்தை வாங்கி தன் சீடர்கள் மூலம் ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

கோவிட் கட்டுப்பாட்டால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக நடைபெற்றுவரும் மதுரை சித்திரைத் திருவிழாவில் மீனாட்சியம்மன் கோயிலில் நாள்தோறும் நடைபெறும் விழாக்களில் மக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், மீனாட்சி அம்மன் கோயில் அருகே அமைந்துள்ள நித்யானந்தா ஆசிரமத்தில், கைலாசாவில் இருக்கும் நித்யானந்தா காணொலிக் காட்சி மூலம் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகளை காணும் வசதியை ஏற்படுத்தி வைத்திருந்தனர். அவர் நேரலையில் பார்பதை பொதுமக்கள் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்தனர். அதையடுத்து, கைலாசா ஆசிரமத்தில் இருந்தபடியே பூஜைகள் செய்து கொண்டிருந்தார் நித்யானந்தா.

காணொலியில் நித்யானந்தா

அவர் உத்தரவின்பேரில் பக்தர்களுக்கு பல வகையான பிரசாதங்களை வழங்கினார்கள் அவரின் சீடர்கள். பிரசாதம் வாங்கக் கூட்டம் முண்டியடித்ததால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது நித்யானந்தா காணொலிக் காட்சி மூலம் கலந்துகொண்டது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/MkVUjRa
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*