Vijay66: விஜய்யிடம் பூரித்த ராஷ்மிகா; கோகுலம் ஸ்டூடியோ செட்! படப்பூஜை ஹைலைட்ஸ்!

0

விஜய் 66 படத்தின் பூஜை, சென்னையில் கோகுலம் ஸ்டூடியோவில் கோலாகலமாகத் தொடங்கியது. விஜய்யின் 'பீஸ்ட்' ரிலீஸை நோக்கி காத்திருக்கிறது. இன்னொரு பக்கம், சத்தமே இல்லாமல் 'விஜய்66'க்கான படப்பிடிப்புக்கும் கிளம்பிவிட்டார் விஜய்.

ராஷ்மிகா , விஜய்

'தோழா' படத்தின் இயக்குநர் வம்சியுடன் கைகோர்த்திருக்கிறார் விஜய். இன்று காலை நடந்த இப்படத்தின் பூஜையில் விஜய், தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குநர் வம்சி, நடிகர் சரத்குமார், ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தமன் ஆகியோர் பங்கேற்றனர். தயாரிப்பாளர் தில் ராஜூ கிளாப் போர்டு அடித்து, படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். கோகுலம் ஸ்டூடியோவில் பிரமாண்டமான செட் ஒன்று அமைத்துள்ளனர். அதில் தான் முதல்கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. பத்து நாட்கள் நடைபெறலாம் எனத் தெரிகிறது. இங்குதான் பீஸ்ட்டின் படப்பிடிப்பும் நடந்தது.

சரத்குமார், விஜய்

இன்று நடந்த பூஜையில் டாக் ஆஃப்த டாபிக், ராஷ்மிகா மந்தனாதான். முதன்முறையாக விஜய்யுடன் நடிப்பதால், குஷியோ குஷியாக ஸ்பாட்டில் இருந்தார். காரணம், விஜய்யின் இதற்கு முந்தைய படங்களான 'மாஸ்டர்', 'பீஸ்ட்' ஆகிய படங்களில் இருந்தே ராஷ்மிகாவை ஜோடியாக்க முயற்சிகள் நடந்தன. ஆனால், வாய்ப்புகள் தள்ளிப்போனது. விஜய் 66- லும் அதற்கான பேச்சுகள் வந்தன. 'புஷ்பா'வுக்கு பிறகு ராஷ்மிகாவை கேட்டபோது, அவரது தேதிகளை இந்தி படங்களுக்கு கொடுத்திருந்தார். அதனால் கீர்த்தி சனூன், திஷா பதானி என பலரின் பெயர்கள் பரீசீலிக்கப்பட்டன. இதற்கிடையே விஜய்யின் படத்தை இம்முறை மிஸ் பண்ண விரும்பாத ராஷ்மி, தனது தேதிகளை 'விஜய்66'க்கு ஒதுக்கி கொடுத்துவிட்டார். சரத்குமார் இதில் வில்லனாக நடிக்கிறார் என்கிறாரகள்.

பூஜையின் போது..

ராஷ்மிகா இன்று ஏன் அவ்ளோ குஷியாக இருந்தார் என யூனிட்டில் விசாரித்ததில்.. கிடைத்த தகவல் இது. ''ராஷ்மிகா விஜய்யின் தீவிர ரசிகை. விஜய்யை அவருக்கு ரொம்பவே பிடிக்கும். ராஷ்மியின் செலிபிரட்டி க்ரெஷ் விஜய்தான். இப்போது அவரின் கனவு நனவானதன் பூரிப்புதான் இந்த பூஜையில் அவரிடம் வெளிப்பட்டது.'' என்கிறார்கள்.



from தமிழ் சினிமா https://ift.tt/iLrZsEb
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*