தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆல்பாஸ், கோடை விடுமுறை - விரைவில் வெளியாகும் அறிவிப்பு?

0

 

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆல்பாஸ், கோடை விடுமுறை - விரைவில் வெளியாகும் அறிவிப்பு?

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆல்பாஸ், கோடை விடுமுறை - விரைவில் வெளியாகும் அறிவிப்பு?
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆல்பாஸ், கோடை விடுமுறை - விரைவில் வெளியாகும் அறிவிப்பு?
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆல்பாஸ், கோடை விடுமுறை – விரைவில் வெளியாகும் அறிவிப்பு?

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடத்தாமல் கோடை விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்து உள்ளார். மேலும் அவரின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்குமா என்பதை பொறுமையாக தான் பார்க்க வேண்டும்.

கோடை விடுமுறை

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு பல சிக்கல்களை சந்தித்து தவித்து வந்தது. மேலும் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், உற்பத்தி போன்ற துறைகளை காட்டிலும் மீட்டெடுக்க முடியாத நாட்களாக இந்த கொரோனா கால கட்டம் இருந்தது. அதனை தொடர்ந்து மாணவர்களின் கல்வி சீரழிந்து விட்டது என்றே கூறலாம். மேலும் இந்த கொரோனாவின் முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் இருந்த போது பள்ளிகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு வந்தது. இந்த வகையில் மாணவர்கள் பாடத்தை கற்றாலும் பள்ளிக்கு சென்று அங்கு இருக்கும் சூழலில் பாடம் கற்பது மிகவும் சிறந்ததாக இருந்து வந்தது. இதனை இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இழந்து வந்தனர். இந்நிலையில் சென்ற இறுதியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10,11, 12 வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடுத்தாக வரவுள்ள பொது தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது மே மாதம் முதல் வாரத்தில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் ஆரம்பிக்க உள்ளது. அதனை தொடர்ந்து 10,11 ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தற்போது பொது தேர்வுகள் நடைபெற உள்ள வகுப்புகளுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதன் பின்னர் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வெயில் கடுமையாக கொளுத்தும் காரணத்தால் பலரும் இந்த தேர்வுகள் குறித்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தற்போது பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளார். அது என்னவென்றால், இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால் மாநிலத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வாட்டி வதைத்து வருகிறது. அதனால் பொது தேர்வுகள் நடைபெறும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் செய்து கோடை விடுமுறையை விரைவில் அறிவிக்குமாறு தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்து உள்ளார். மேலும் நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இன்றி தேர்ச்சி என்று பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Umn news Tamil 



Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*