நகையுடன் எஸ்கேப்; முன்னாள் காதலனை இன்னாள் காதலன் மூலம் பழிவாங்கிய கல்லூரி மாணவி - எச்சரித்த போலீஸ்

0

கன்னியாகுமரி மாவட்டத்தில் தன்னை ஒரு கும்பல் தாக்கியதாக கல்லூரி மாணவர் அளித்த புகாரின் பேரில், 5 பேரை கைது செய்த காவல்துறை, கல்லூரி மாணவி ஒருவரை காவல் நிலையம் அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளது. என்ன நடந்தது என காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்.

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ஷைஜூ(19). இவருக்கு வாகவிளையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானார். கடந்த ஒரு ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்துள்ளனர். மாணவி வசதியான வீட்டைச் சேர்ந்தவர் என்பதால் ஷைஜூவுக்கு விலை உயர்ந்த பரிசுகள், பாக்கெட் மணி என கொடுத்து மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார்.

மாணவியிடம் பெரிதாக ஒரு தொகையை வாங்கி விட நினைத்த ஷைஜூ, தனக்கு அவசர செலவுக்கு பணம் தேவைப்படுவதாக கூறி அவருடைய தங்கச் சங்கிலி, மோதிரம் என 4 சவரன் தங்க நகைகளை கழற்றி வாங்கியுள்ளார். அதன்பிறகு கல்லூரி மாணவியுடனான தொடர்பை துண்டித்துவிட்டாராம் ஷைஜூ. மாணவி பலமுறை செல்போனில் தொடர்புகொண்டும் ஷைஜூ தொடர்பு எல்லைக்குள் வரவே இல்லை.

கைதான இரண்டாவது காதலன் சதீஷ்குமார்

இந்த நிலையில் அந்த கல்லூரி மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கருங்கல் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்ற மற்றொரு வாலிபருடன் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இருப்பினும், தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலன் மீதான கோபம் அந்த மாணவியின் மனதுக்குள் கனன்றுகொண்டு இருந்திருக்கிறது. எனவே, புதிய காதலன் சதீஷ்குமார் மூலம் பழிவாங்க முடிவு செய்தார் மாணவி. தனக்கு ஷைஜூ என்ற நண்பன் இருந்ததாகவும், அவன் 4 பவுன் நகையை பறித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அவன் நம் காதலைப் பற்றி பெற்றோரிடம் போட்டுக்கொடுத்துவிட்டதாகவும், அதனால் தனக்கு வீட்டில் பிரச்னை ஆகிவிட்டதாகவும் சதீஷ்குமாரிடம் கூறி அழுதிருக்கிறார் மாணவி. காதலியின் கண்ணீரைப் பார்த்ததும் சதீஷ்குமாருக்கு ஷைஜூ மீது ஆத்திரம் பொங்கியது. சதீஷ்குமார் கடந்த மாதம் 20-ம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து ஷைஜூ-வை கடத்தியிருக்கிறார். பின்னர் மண்டைக்காட்டில் ஒரு இடுகாடு பகுதிக்கு ஷைஜூ-வை கொண்டுசென்று சரமாரியாக தாக்கியுள்ளார் சதீஷ்குமார்.

மண்டைக்காடு காவல் நிலையம்

அடிவாங்கிக்கொண்டு அமைதியாக தான் இருந்திருக்கிறார் ஷைஜூ. ஆனால், சதீஷ்குமார் தரப்பு ஷைஜூ மீது தாக்குதல் நடத்தியதை வீடியோவாக எடுத்து வாட்ஸ் அப்பில் பரவ விட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது பரவியதை அடுத்து, ஷைஜூ மண்டைக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், மாணவியின் இரண்டாவது காதலன் சதீஷ்குமார், அவரது நண்பர்கள் ஆனந்தராஜ், விஷ்ணு, சஞ்சய், ராகுல் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதற்கெல்லாம் காரணமான மாணவியை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்து, எச்சரிக்கை செய்து அனுப்பியது போலீஸ். முன்னாள் காதலனை பழிவாங்க, இன்னாள் காதலனை பயன்படுத்திய மாணவியின் செயல் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/1KQoGFB
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*