பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பணி ஆணை வழங்க லஞ்சம்... ஊராட்சி செயலாளர் சிக்கியது எப்படி?

0

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகில் உள்ள விக்கிரபாண்டியம் ஊராட்சி அருவி விழிமங்கலத்தைச் சேர்ந்த ஊராட்சி செயலாளர் குமார், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

நடப்பு ஆண்டு, விக்கிரபாண்டியம் ஊராட்சியில் 17 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி ஊரக வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வீடுகள் கட்ட அனுதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தான் விக்கிரபாண்டியம் ஆற்றங்கரை தெருவில் வசித்து வரும் குமார் என்பவர் தனது மனைவி ஜேஸ்லிமேரி பெயரில் விண்ணப்பத்திருந்த விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, வீடுகட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணி ஆணை, ஊராட்சி செயலாளர் குமாரிடம் இருந்துள்ளது.

கைது செய்யபட்டவர்

இந்நிலையில் வீடு கட்டுவதற்கான பணி ஆணையை பெறுவதற்காக, ஜேஸ்லிமேரியின் கணவர் குமார், விக்கிரபாண்டியம் ஊராட்சி செயலாளர் குமாரை பலமுறை அணுகியிருக்கிறார். ஆனால் அவர் இதனை வழங்காமல் அலைக்கழித்திருக்கிறார். பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் பணி ஆணை வழங்க முடியும் என ஜோஸ்மேரி கணவர் குமாரிடம், ஊராட்சி செயலாளர் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. தன்னிடம் அந்தளவுக்கு பணம் இல்லாததாலும், லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாததாலும் ஜோஸ்மேரியின் கணவர் குமார், இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்திருக்கிறார்.

லஞ்சம்

ஊராட்சி செயலாளர் குமாரை கையும் களவுமாக பிடிக்க துணை கண்காணிப்பாளர் நந்தகோபால், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜோஸ்மேரியின் கணவர் குமாரிடம் கொடுத்து அந்த பணத்தை ஊராட்சி செயலாளர் குமாரிடம் கொடுக்குமாறு கூறியிருக்கிறார்.

அதனை தொடர்ந்து அந்த ரூபாய் நோட்டுகளுடன் ஊராட்சி அலுவலகத்துக்கு சென்ற குமார், அந்த பணத்தை, ஊராட்சி செயலாளர் குமாரிடம் வழங்கியிருக்கிறார். அதனை அவர் பெற்றுக் கொண்டபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் நந்தகோபால், ஆய்வாளர்கள் தமிழ்செல்வி, சித்ரா ஆகியோர் ஊராட்சி செயலாளர் குமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்திருக்கிறார்கள். ஊராட்சி செயலாளர் குமார் தொடர்ச்சியாக பல லஞ்ச முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில், தற்போது பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கான பணி ஆணை வழங்க, பயனாளியிடம் லஞ்சம் கேட்டு சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/oRq1SeL
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*