``இந்து கலாசாரத்துக்கு எதிராக திமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது..!" - எல்.முருகன்

0

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``தமிழக மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளாகச் சொன்னதைச் செய்ய தவறி உள்ளது தற்போதைய தி.மு.க அரசு. சில பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி வாக்குகளை வாங்கிவிட்டு ஒரு ஆண்டு கழிந்தும்கூட அந்த வாக்குறுதிகள் குறித்து வாய் திறக்காதது கண்டனத்துக்கு உரியது. குறிப்பாக தாய்மார்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகையாகத் தருவோம் என்றார்கள்.

எல்.முருகன்

ஆனால், அது குறித்து எந்த இடத்திலும் அவர்கள் வாயைத் திறப்பதில்லை. ’ திராவிட மாடல்’ எனச் சொல்கிறார்கள். பல கிராமங்களில் தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது. பல கிராமங்களில் இன்னமும் தனித்தனி மயானங்கள்தான் உள்ளது. இது தான் திராவிட மாடலா? தேர்தல் அறிக்கையில் கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி எனச் சொன்னதெல்லாம் எப்படி காற்றில் பறந்ததோ அதே போல, சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அளித்து உள்ளனர்.

பொய்யான தேர்தல் அறிக்கைகளை கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்த பின்பு அதனை மறப்பதுதான் தி.மு.க-வின் வாடிக்கை. அதைத்தான் தி.மு.க அரசு செய்து கொண்டுள்ளது. உள்ளாட்சி நிர்வாகம் மாநில அரசுக்குட்பட்டது. இதில் மத்திய அரசு எங்கு வந்தது என்பது ஆச்சர்யமானதாக உள்ளது. மத்திய அரசுக்கும் உள்ளாட்சி வரி விதிப்புக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆட்சிக்கு வந்ததும் ஏழை மக்கள் மீது நூறு சதவிகித வரி திணிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு என்பதே இல்லை.

எல்.முருகனை சந்தித்த நிர்வாகிகள்

தமிழக அரசு கேட்டதை விட கூடுதலாக நிலக்கரியை மத்திய அரசு கொடுத்து வருகிறது. கடந்த ஓராண்டாக தற்போயைய தி.மு.க அரசு மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. சட்டம் ஒழுங்கும் சீர்குலைந்துள்ளது. ஆங்காங்கே லாக் அப் டெத் நடந்து கொண்டிருக்கிறது. பல இடங்களில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. தொடர்ந்து இந்து கலாசாரத்திற்கு, எதிராக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/SqgtWzA
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*