சிலட்டூர் முத்துமாரியம்மன் வைகாசித் தேரோட்ட விழா; 18 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்பு

0

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிலட்டூர் முத்துமாரியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவானது கடந்த ஜூன் 6ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, ஒவ்வொரு நாளும் முத்துமாரியம்மனுக்குச் சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெற்றன. சிம்மம், யானை, மயில் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்திருவிழா கோலகலமாக நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி, முத்துமாரியம்மனுக்கு சிறப்பு, அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.

வைகாசித் தேரோட்ட விழா

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் திருத்தேரில் சிலட்டூர் வீதிகளில் எழுந்தருளினார். ஓம் சக்தி, பராசக்தி என்ற கோஷம் முழங்க ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 18 கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். வைகாசித் திருவிழாவில் இன்று (ஜூன்14 - ம் தேதி) தீர்த்தத் திருவிழா நடைபெறுகிறது. தொடர்ந்து, ஜூன் 16 - ம் தேதி தெப்பத் திருவிழாவும், ஜூன் 18 - ம் தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/XcLmnAj
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*