நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பதிவு - கோவை இளைஞர் கைது

0

பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் முகமது நபிகள் குறித்து வெளியிட்ட கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. அரபு நாடுகள் தொடங்கி, அரசியல் கட்சிகள் வரை கண்டனம் தெரிவித்து வருகின்றன.

நுபுர் சர்மா

நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்து வருகின்றன. அதேநேரத்தில் சிலர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவது இந்த விவகாரத்தை மேலும் சர்ச்சை ஆக்குகிறது.

நுபுர் சர்மாவை இடை நீக்கம் செய்தும், நவீன்குமாரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கியும் பாஜக உத்தரவிட்டது. இந்நிலையில் கோவை சென்னனூர் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (24) என்கிற இளைஞர்,

கார்த்தி

தன் முகநூல் பக்கத்தில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பதிவு செய்துளளார். அது இரண்டு தரப்புக்கிடையே பகை உணர்வை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து கோவை மாவட்ட சைபர் க்ரைம் போலீஸ் தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பகை உணர்வை தூண்டுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

கார்த்தி கைது

கைது செய்யப்பட்ட கார்த்தி பாஜக மற்றும் வலது சாரி கொள்கைக்கு ஆதரவாக தொடர்ந்து பதிவு செய்து வந்துள்ளார். பாஜக, வலது சாரி அமைப்புகள் அவர் கைதுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/PB03GtY
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*