``அரசியல் செய்வதற்காக அண்ணாமலை அரசு மீது புழுதிவாரி தூற்றுகிறார்” - சொல்கிறார் திருநாவுக்கரசர்

0

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட மியூசியம் பேருந்து நிலையத்தில் அந்தப் பகுதியின் வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரி தனது சொந்த செலவில் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளார். திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டு சிசிடிவி கேமரா பயன்பாட்டை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``மதுரை ஆதீனமாக இருந்தாலும் சரி எந்த ஆதீனமாக இருந்தாலும் சரி, அவர்களை நாம் மதிக்கிறோம். அரசும் மதிக்கிறது. மடாதிபதிகளை பேசவே கூடாது என்று சொல்லவில்லை. அவர்களுடைய பேச்சு, பிரிவினைகளை ஏற்படுத்தும் வகையிலோ, மற்ற மதங்களை இழிவுபடுத்தும் விதத்திலோ, புண்படுத்தும் விதத்திலோ, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ பேசக்கூடாது. அது தான் என்னுடைய கருத்து.

மதுரை ஆதீனம்

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை அமலாக்கத்துறை அழைத்திருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. ஏற்கனவே, கார்த்தி சிதம்பரம், ப.சிதம்பரம் ஆகியோர் வீட்டில் 6 முறை சோதனை நடைபெற்றது. அதில் என்ன கைப்பற்றப்பட்டது என்பதனை இதுவரை தெளிவுபடுத்தவில்லை. எனவே இதனையெல்லாம், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தான் செய்கிறார்கள்.

அண்ணாமலை

பாஜக தலைவர் அண்ணாமலை, ஒன்றும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் அல்ல. அவர் சொல்வது வேதவாக்கும் இல்லை. அரசியல் செய்வதற்காகவே தமிழக அரசு மீது புழுதி வாரி தூற்றுகிறார்.

கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் அந்த மாநில முதலமைச்சரை, அவரின் குடும்பத்தை அதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி சிக்க வைப்பதற்காக வாக்குமூலம் அளித்துள்ளார். ஒரு குற்றவாளியின் வாக்குமூலம் எந்த அளவுக்கு எடுபடும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/4uOdE8x
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*