தூத்துக்குடி: காட்டிக் கொடுத்த நகக்கீறல்கள்; வீட்டை எழுதித் தராததால் தந்தையைக் கொலைசெய்த குடும்பம்!

0

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்குடியைச் சேர்ந்தவர் மகாராஜன். இவர் மரம் வெட்டும் கூலித் தொழிலைச் செய்துவந்திருக்கிறார். இவர் மனைவி முருகம்மாள். இவர்களுக்கு பெனிஸ்கர் என்ற மகனும், மூன்று மகள்களும் இருக்கின்றனர். இதில் மகன் பெனிஸ்கர் சென்னையில் வசித்துவருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு பெனிஸ்கர், ஊருக்கு வந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று காலை மகாராஜன் வீட்டில் தூங்கிய நிலையில் இறந்துகிடந்திருக்கிறார். இதனையடுத்து சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸார் மகாராஜனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தந்தையைக் கொலைசெய்த பெனிஸ்கர்

முதலில் சந்தேக மரணம் என போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். இந்த நிலையில், மகாராஜனின் கழுத்துப் பகுதியில் நகக்கீறல்கள் இருந்திருக்கின்றன. இதில், போலீஸார் சந்தேகமடைந்தனர். மேலும் மகாராஜனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து சென்னையிலிருந்து திடீரென ஊருக்கு வந்த பெனிஸ்கரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ``நான் சென்னையில் ஒரு கடையில் வேலை பார்த்துவந்தேன். அங்கே தர்ற சம்பளம் போதுமானதா இல்லை. சொந்த ஊர்ல ஏதாவது தொழில் தொடங்கலாம்னு நினைச்சேன். அப்பாவிடம் பணம் கேட்டேன். பணம் தர மறுத்தார். வீட்டையாவது என் பேர்ல எழுதித்தாங்க. அந்தப் பத்திரத்தை பேங்க்ல அடமானம்வெச்சு லோன் வாங்கி ஏதாவது தொழில் செஞ்சுக்கிறேன்னு கேட்டேன். அதற்கும் தர மறுத்தார். அவதூறாவும் பேசினார். அம்மா, தங்கை ரெண்டு பேரும் கேட்டும் அவங்களையும் அவதூறாப் பேசினார்.

கொலைசெய்யப்பட்ட மகாராஜனின் வீடு

கோவத்துல கையாலயும் கயித்தாலயும் அப்பாவோட கழுத்தை இறுக்குனேன். அம்மா, தங்கை ரெண்டு பேரும் அவரோட காலைப் பிடிச்சாங்க. வீட்டை எழுதித் தராததுனால கொன்றோம்” எனச் சொல்லி போலீஸாரையே அதிரவைத்திருக்கிறார். இதனையடுத்து பெனிஸ்கர், அவர் தாய் முருகம்மாள், தங்கை இசக்கிரேவதி ஆகியோரைக் கைதுசெய்தனர். பின்னர், சந்தேக மரணத்தைக் கொலை வழக்காக மாற்றி பதிவுசெய்தனர் போலீஸார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/YqaLrEc
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*