தமிழக வாகன ஓட்டிகள் கவனத்திற்கு - புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்தம் அமல்!

தமிழக வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்தம் அமல்!
தமிழகத்தில் புதிய வாகன மோட்டார் சட்டத்திருத்த மசோதாவை அரசுக்கு சென்னை காவல்துறை கடிதம் எழுதியுள்ளது. இதில் காவலர்களுக்கு அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இனி புதிய சட்டங்கள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாகன சட்டம்:
தமிழகத்தில் சாலைகளில் விபத்து மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க சாலை பாதுகாப்பு விதிகள் உள்ளது. சாலைகளில் செல்லும் ஒவ்வொரு வாகனங்களும் இத்தகைய விதிகளை பின்பற்றி செல்ல வேண்டியது அவசியம். முதலில் வாகனம் ஓட்டும் அனைவரும் வாகன திருத்த சட்டத்தின்படி ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இரு சக்கர வாகனம் ஓட்டுனர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும். வாகனங்களில் செல்பவர்கள் சாலை குறியீடுகளை கவனித்து வாகனத்தை இயக்க வேண்டும், சாலை விளக்குகளை கவனித்து செல்ல வேண்டும், ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும், அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே வாகனத்தை இயக்க வேண்டும் போன்ற ஏராளமான விதிமுறைகள் உள்ளது.
மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பாதுகாப்பான சாலைப் பயணத்தை மேற்கொள்ள முடியும். மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை 2019-ம் ஆண்டில் அமல்படுத்தியது. வாகனங்களின் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் பல்வேறு விதிகள் அமல்படுத்தப்பட்டது. புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி பல்வேறு பகுதிகளில் தமிழகத்தில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு பல மடங்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் வாகனத்தை ஆபத்தான வகையில் ஓட்டினால் தற்போது 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில் அது 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. இந்த நிலையில் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்த மாசோதாவை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை காவல்துறை கடிதம் எழுதியுள்ளது. அதில் குடிபோதையில் காவலர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க சட்டத்தில் பரிந்துரை செய்ய வேண்டியது குறிப்பிட்டத்தக்கது. மேலும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல் அளித்துள்ளார்.
Umn news Tamil
