IRCTC: தமிழகத்திலிருந்து காசிக்கு ஐ.ஆர்.சி.டி.சி-யின் விமானச் சுற்றுலா!

0
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) பல்வேறு சுற்றுலா ரயில்களை நாடு முழுவதும் இயக்கி வருகிறது. தமிழகத்திலிருந்து ஆன்மிகச் சுற்றுலா ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஐ.ஆர்.சி.டி.சி

இதுவரை மதுரையிலிருந்து காசி, கயா போன்ற இடங்களுக்கு ரயில் மூலம் சுற்றுலாவைத் திட்டமிட்டு நடத்தி வடந்தது. தற்போது ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்சியிலிருந்து கயா, வாரணாசி, அலகாபாத், அயோத்தியா போன்ற ஆன்மிக தலங்களுக்கு விமானம் மூலம் சுற்றுலாவைத் திட்டமிட்டுள்ளது.

மொத்தம் 7 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த சுற்றுலா திட்டம், ஜூலை 27 அன்று திருச்சியிலிருந்து தொடங்குகிறது. இதற்கான விமான கட்டணம், உள்ளூர் போக்குவரத்து, தங்குமிடம், உணவு, பயண காப்பீடு உட்பட ஒரு நபருக்கு ரூ 37,900 கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது.

காசி விஸ்வநாதர்

கொரோனா முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகளோடு இந்த சுற்றுலா நடைபெறும்.

பொது மக்கள் மட்டுமல்லாமல் அரசு ஊழியர்கள் எல்.டி.சி. வசதியைப் பயன்படுத்தி இந்த சுற்றுலாவில் கலந்து கொள்ளலாம்.

புத்த கயா

இதுகுறித்து கூடுதல் விவரங்கள் தெரிந்துகொள்ள 8287931977 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/pnqW4HM
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*