கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு செல்வதை தொடர்ந்து, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று இரவு நான்கு பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அதில் மூன்று இளைஞர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மேட்டூர் அணையில் நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து கடந்த சில தினங்களாக அணையிலிருந்து தண்ணீர் அதிகமாக திறக்கப்பட்டு வருகிறது. இதனால் காவிரி உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் நீர் வரத்து அதிகமானதை தொடர்ந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களின் பாசனத்திற்காக திறந்துவிடப்படும் தண்ணீர் அதிகரிக்கப்பட்டது.
குறிப்பாக கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் கரைபுரண்டு தண்ணீர் ஓடி வருகிறது. காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் அதிகமாக செல்வதால் கரையோரம் வசிப்பவர்கள், சுற்றுல்லாப் பயணிகள் என அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும் படி மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எச்சரிக்கை விடுத்தார்.
குறிப்பாக ஆற்றின் கரையோரம் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில் கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடித்து கொண்டிருந்த மூன்று பேர் தண்ணீர் அடித்து செல்லப்பட்டனர். தீயணைப்பு துறையினர் அவர்களை தேடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கும்பகோணம், திருவிடைமருதூர் வட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள மதகு சாலை பகுதியை சேர்ந்தவர்கள் ஆகாஷ் (24), சேகர், மனோஜ்(23), ராஜேஷ்(22),கொளஞ்சிநாதன்(34) ஆகிய நான்கு பேரும் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் மதகு சாலை கொள்ளிடம் ஆற்றின் நடுவில் உள்ள மணல் திட்டில் நின்று மீன் பிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்துள்ளது.
இதையடுத்து நான்கு பேரும் எங்களை காப்பாத்துங்கனு சத்தம் போட்டுள்ளனர். இதனை பார்த்த கரையோரம் நின்ற அப்பகுதியினர் தீயணைப்பு துறைக்குக்கும்,போலீஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அதற்குள் தண்ணீர் வரத்தும், வேகமும் அதிகரித்துள்ளது. இதில் கொளஞ்சிநாதனை தவிர மற்ற மூன்று பேரும் அடித்து செல்லப்பட்டுள்ளனர். உடனடியாக வந்து தீயணைப்பு வீரர்கள் கொளஞ்சிநாதனை மீட்டனர்.
மேலும் அடித்து செல்லப்பட்ட மூன்று பேரையும் தேடி வருகின்றனர். அவர்களின் நிலை தெரியாததால் மதகு சாலை பகுதியினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இதையடுத்து இன்று காலை சம்பவ இடத்துக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் தேடுதலை தீவிரபடுத்தும் படி தீயணைப்பு துறையினருக்கு அறிவுறுத்தினார். மேலும், ``கொள்ளிடம் ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டதையும் மீறி இளைஞர்கள் மீன் பிடித்துள்ளனர். அதில் மூன்று பேர் அடித்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/9uznRWM
via
