தூத்துக்குடி: தண்ணீர் பிடிக்கும் தகராறில் ஒருவர் கொலை... ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

0

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள இலுப்பையூரணியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் சவரத் தொழில் செய்து வந்தார். இவரின் மனைவி பாண்டியம்மாள். இவர்களின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் கணபதி. பாண்டியம்மாளுக்கும் கணபதியின் மனைவி கருப்பாயிக்கும் தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பது சம்மந்தமாக அடிக்கடி தகராறு ஏற்படுவதும் தெருவில் உள்ளவர்கள் விலக்கி சமாதானம் செய்து வைப்பதும் தொடர்கதையாகவே இருந்து வந்துள்ளது. இதனால், இரண்டு குடும்பத்தினரிடையே முன்விரோதமும் இருந்து வந்தது.

நாலாட்டின்புதூர் காவல் நிலையம்

இந்தநிலையில், கடந்த 2014, ஏப்ரல் 3-ம் தேதி ராஜேந்திரன் அவரின் வீட்டின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தாராம். அப்போது கணபதிக்கும் ராஜேந்திரனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கணபதி, அவரின் மனைவி கருப்பாயி, மகன்கள் ராமர், லெட்சுமணன் மற்றும் கண்ணன் ஆகியோர் ராஜேந்திரனை கத்தியால் குத்தியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் கொலை செய்தனர்.

இதனைத் தடுக்க வந்த ராஜேந்திரனின் மனைவி பாண்டியம்மாளுக்குக் கத்திக்குத்தும் விழுந்தது. இந்த கொலைச் சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் காவல் நிலையப் போலீஸார், கணபதியின் குடும்பத்தினர் 5 பேரின் மீதும் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கணபதி தன் குடும்பத்தினருடன் மும்பைக்குச் சென்று தலைமறைவாகிவிட்டார்.

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கணபதியின் மகன்கள்

8 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 2-ம் தேதி மும்பையில் கைது செய்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர். இந்த வழக்கு, தூத்துக்குடி 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசுத் தரப்பில் 15 சாட்சிகளும், 29 சான்று ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டது. வழக்கினை விசாரித்த நீதிமன்றம் 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/BAHcd9u
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*