வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஒன்றியத்துக்குஉட்பட்ட மாச்சம்பட்டு கிராமத்தில், ஊராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை ஆசிரியராக, பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 52 வயதாகும் பால்வண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பால்வண்ணன், தொடர்ச்சியாக பணிபுரியக்கூடிய பள்ளிகளில் பாலியல் புகாருக்குள்ளாகி, பணியிடை மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு முன்பு பணிபுரிந்த பள்ளியிலும், பாலியல் புகார் கூறப்பட்ட நிலையில் அங்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இதையடுத்து, மாச்சம்பட்டு பள்ளிக்கு இடமாற்றத்தில் வந்து, சில மாதங்களே ஆகிறது. இந்த நிலையில், 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் நேற்று முன்தினம் மதிய வேளையில், அத்துமீறியிருக்கிறார்.
அந்த மாணவி அச்சத்தில் கதறி அழுதபோதும் விடாமல் மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனை மற்றொரு மாணவி பார்த்துவிடவே, அவரையும் மிரட்டியிருக்கிறார். மிரட்டலுக்கு ஆளான மாணவி மாலையில் வீட்டுக்குச் சென்று தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார். அதன்பின்னரே, தலைமை ஆசிரியரின் கொடிய புத்தி வெளிச்சத்துக்கு வந்தது.
இது குறித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் தரப்பில் உமராபாத் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ‘போக்ஸோ’ சட்டத்தின்கீழ் பால்வண்ணனை கைது செய்தனர். இந்த விவகாரம் வெளியில் கசிய ஊர் மக்கள் பலரும் காவல் நிலையம் முன்பு கூடினர். அவர்களிடம் கொந்தளிப்பு காணப்படவே, ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினர் சமாதானம் செய்தனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/C4NqYMp
via
