விமானத்தில் வந்து கொள்ளை; கோவையை அதிரவைத்த வட மாநில கும்பல் கைது!

0

கோவை ஆர்.எஸ்.புரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடப்பதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இதையடுத்து அந்த குற்றவாளிகளைப் பிடிக்க, உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

கோவை

அந்தத் தனிப்படை ஆர்.எஸ்.புரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பூ மார்க்கெட் பகுதியில் சந்தேகத்துக்குறிய வகையில் கும்பல் ஒன்று சுற்றிக்கொண்டிருந்தது.

3 சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேர்கொண்ட அந்த வடமாநில கும்பல், ஒரு முதியவரிடமிருந்து பணம், செல்போனை திருடியிருக்கின்றனர். இதை கவனித்த தனிப்படையினர் உடனடியாகச் சென்று அவர்கள் 7 பேரையும் சுற்றி வளைத்தனர். அதைத் தொடர்ந்து அவர்களை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

கைதுசெய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

அதில் அவர்கள், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பகதூர் மகடோ, சந்தோஷ், பப்லு மகடோ, பீகாரைச் சேர்ந்த மனிஷ்மகோலி என்பது தெரியவந்தது. இவர்களுடன் 10,14,15 வயதில் 3 சிறுவர்களும் திருட்டில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

இவர்கள் 7 பேரும் விமானம் மூலம் கோவைக்கு வந்து, அறை எடுத்துத் தங்கி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஏராளமான பகுதிகளில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது (மாதிரி படம்)

திருடிய பிறகு, விமானம், ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதையடுத்து பெரியவர்கள் 4 பேரை கைதுசெய்து சிறையில் அடைத்த போலீஸார், சிறுவர்கள் 3 பேரை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/NT5YnjF
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*