விடாமல் துரத்தும் வருமானவரித்துறை... சிக்கலில் வேலுமணி?!

0

எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க, நாளை அ.தி.மு.க பொதுக்குழு கூடவுள்ளது. இ.பி.எஸ், ஓ.பி.எஸ், சசிகலா என அ.தி.மு.க மூன்றாகப் பிரிந்து கட்சியைக் கைப்பற்ற முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். மறுபக்கம் அ.தி.மு.க-வில் எடப்பாடிக்கு அணிக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருமான வரித்துறை ரெய்டு

அந்த வகையில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்களிடம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக வருமானவரித்துறை சோதனை தொடர்கிறது.

கடந்த புதன்கிழமை கோவை வடவள்ளி பகுதியில் உள்ள வேலுமணியின் நிழலாக வலம் வருபவரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். தொடர்ந்து சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் சந்திரசேகர்,

சந்திரசேகர்

அவர் சகோதரர் செந்தில் பிரபு உள்ளிட்டோர் தொடர்புடைய இடங்களில் சோதனையைத் தொடர்ந்தனர். அதே போல கடந்த ஆட்சியில் உள்ளாட்சித்துறையில் அதிகப் பணிகள் எடுத்த கே.சி.பி நிறுவனம் தொடர்புடைய இடங்களிலும் சோதனை தொடர்கிறது.

இந்நிலையில் வேலுமணியின் உதவியாளர் சந்தோஷ் சகோதரர் வசந்தகுமார் என்பவர் வீட்டில் நேற்று இரவு முதல் வருமானவரித்துறை தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது. வசந்தகுமார் நமது அம்மா நாளிதழில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

வசந்தகுமார்

அந்த அடிப்படையில் கோவை மைல்கல் பகுதியில் உள்ள அவர் இல்லத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல கே.சி.பி இன்ஜினீயரிங்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் சந்திரபிரகாஷ் வீடு, அலுவலகத்திலும் ரெய்டு தொடர்கிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/43iH2D1
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*