WhatsApp New Feature Allow Android Users to Sync Chats Between Two Smartphones

0

 

WhatsApp New Feature Allow Android Users to Sync Chats Between Two Smartphones

கொடுத்து வைத்த ஆண்ட்ராய்டு யூசர்கள்!

ஏனெனில், வாட்ஸ்அப் நிறுவனம் டெஸ்ட் செய்யும் அம்சங்களை பற்றி 'அக்குவேறு ஆணிவேறாக' பிரித்து காட்டுவதில் கில்லாடியான WABetainfo வலைதளம் வழியாக நமக்கு கிடைத்த தகவலின்படி, 'வாட்ஸ்அப் சாட் சிங்க்' அம்சமானது ஆண்ட்ராய்டு பீட்டாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பிட்ட அம்சம் தற்போது வாட்ஸ்அப் பீட்டாவின் 2.22.15.13 ஆண்ட்ராய்டு வெர்ஷனில் சோதனை கட்டத்தில் உள்ளதாம்.

இது எப்போது அனைவருக்கும் வரும்?

உங்களை போலவே, இது எப்போது அனைவருக்கும் அணுக கிடைக்கும் என்று நாங்களும் ஆர்வமாகத்தான் உள்ளோம். ஆனால் இது எப்போது வாட்ஸ்அப்பின் "பொது தளத்திற்கு" வரும் என்பது குறித்து போதுமான தகவல்கள் இல்லை.

ஆனாலும் இந்த அம்சம் கொஞ்சம் 'ஸ்லோ'வாக இருக்கும் என்கிற தகவலை நாங்கள் அறிவோம்.


ஸ்லோவாக இருக்கும் என்றால்.. எதில் ஸ்லோ?

'சாட் சிங்க்' அம்சம் வேலை செய்யும் செயல்முறையே 'ஸ்லோ'வாக தான் இருக்குமாம். ப்ரைமரி ஸ்மார்ட்போனில் (அதாவது எந்த ஸ்மார்ட்போனில் இருந்து சாட்-ஐ சிங்க் செய்ய விரும்புகிறீர்களோ, அந்த ஸ்மார்ட்போனில்) இருக்கும் சாட்களின் சைஸ்-ஐ பொறுத்து தான் டிரான்ஸ்பர் ஆகும் வேகமும் இருக்குமாம்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், குறிப்பிட்ட 'சாட் சிங்க்' ஆனது வயர்லெஸ் மூலம் நிகழ்வதால், "நிறைய" சாட்களை டிரான்ஸ்பர் செய்யும் பட்சத்தில், அது டிரான்ஸ்பர் ஆக சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும்.

அதுவும் சரி செய்யப்படும்!

ஒரே வாட்ஸ்அப் நம்பரை பல போன்களில் "இயக்குவதற்கும்", டிவைஸ்களுக்கு இடையே அனைத்து சாட்களையும் சிங்க் செய்வதற்கான வழியை கண்டுபிடித்த வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு, சாட்கள் வேகமாக டிரான்ஸ்பர் செய்யும் வழியை கண்டுபிடிக்க தெரியாதா என்ன? அதெல்லாம் சிறப்பா செஞ்சிடும்!

வாட்ஸ்அப்பில் வேறு என்னென்ன அப்டேட்?

'சாட் சிங்க்' அம்சத்தை தவிர்த்து, வாட்ஸ்அப் இப்போது ஆண்ட்ராய்டு வெர்ஷனில் உள்ள பல யூசர்களையும் தங்கள் சாட்-களை ஐஓஎஸ் டிவைஸிற்கு 'டிரான்ஸ்பர்' செய்ய அனுமதிக்கிறது.

நினைவூட்டும் வண்ணம், குறிப்பிட்ட அம்சம் சில வாரங்களுக்கு முன்னர் தான் அறிமுகமானது. தற்போது மெல்ல மெல்ல அனைவருக்கும் அணுக கிடைக்கிறது.

Umn news Tamil 


Tags

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*