புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே, புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இருக்கும், மோப்ப நாய் பிரிவுக்குச் சென்று அங்கு நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வுசெய்தார். எத்தனை நாய்கள் இருக்கின்றன, எப்படி பராமரிக்கப்படுகின்றன, என்னென்ன பொருள்கள் வழங்கப்படுகின்றன என்பது குறித்து விரிவாக விசாரித்தார். அப்போது, மோப்ப நாய் பயிற்சிக்காக வழங்கப்படும் கஞ்சாவின் அளவு குறைவாக இருந்திருக்கிறது. அதே நேரத்தில் பதிவேட்டில் முழுமையாக இருப்பு காட்டப்பட்டிருந்திருக்கிறது.
இதையடுத்து, மோப்ப நாய் பிரிவில் பணியாற்றி வரும் காவலர்கள் அஸ்வந்த், சேவியர் ஜான், பழனிசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், மோப்ப நாய்களுக்கு வழங்கப்பட்ட கஞ்சாவைக் காவலர்களே அவ்வப்போது சிறிது, சிறிதாக எடுத்து பயன்படுத்தியது தெரியவந்தது. காவலர்கள் மூன்று பேரும் கஞ்சா கும்பலோடு தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், காவலர்கள் மூன்று பேரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே உத்தரவிட்டார். மோப்ப நாய்க்கு வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை காவலர்களே திருடி பயன்படுத்திய சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/MXjD3cp
via
