பிறந்து 48 நாட்களேயான பெண் குழந்தை கிணற்றில் வீசி கொலை... தாய் கைது - என்ன நடந்தது?

0

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு துலாப்பறம்பு பகுதியைச் சேர்ந்த ரெஜீஸ்குமார் - தீப்தி (26). இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 48 நாள்களே ஆன நிலையில் கடந்த சனிக்கிழமை மதியம் தீப்தி மற்றும் அவரின் தந்தை ரவீந்திரன் ஆகியோர் குழந்தையை, ஹரிப்பாட்டில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

குழந்தையை குளிப்பாட்டும்போது தண்ணீர் வாளியில் விழுந்ததால் பேச்சு மூச்சில்லாமல் இருப்பதாக மருத்துவரிடம் கூறியுள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் இருந்து காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். காவலர்கள் விசாரித்துவிட்டு இயற்கைக்கு மாறான மராணம் என வழக்குப்பதிவு செய்தனர்.

கைது

பிரேதப் பரிசோதனையில், குழந்தை கொலை செய்யப்படிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் தீப்தியிடமும், ரவீந்திரனிடமும் விசாரணை நடத்தினர். அதில், குழந்தை விடாமல் அழுது கொண்டே இருந்ததால் தாய் தீப்தி, கோபத்தில் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதுபற்றி போலீஸார் கூறுகையில், "கடந்த சனிக்கிழமை மதிய நேரத்தில் தீப்தி குழந்தையுடன் இருந்திருக்கிறார். தீப்தியின் அப்பா ரவீந்திரன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். ரவீந்திரன் தூங்கி எழுந்து குழந்தையை வீட்டில் தேடியிருக்கிறார். குழந்தையை காணாததால் தீப்தியிடம் கேட்டிருக்கிறார். அவர் ஒன்றும் சொல்லாமல் பிரம்மை பிடித்தவர் போன்று ஓரிடத்தில் இருந்திருக்கிறார்.

இதனால் ரவீந்திரன் செய்வதறியாது, தீப்தியின் சகோதரனை போனில் அழைத்துள்ளார். அவர் அங்கு சென்று தீப்தியிடம் குழந்தை எங்கே என கேட்டதற்கு, கிணற்றை நோக்கி கையை காட்டியுள்ளார். கிணற்றில் சென்று பார்த்தபோது குழந்தை கிடந்துள்ளது. குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். அங்கு குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தீப்தி குழந்தையை கொன்றதை மறைக்க குழந்தையை குளிக்க வைக்கும் போது வாளியில் இருந்த தண்ணீரில் தவறி விழுந்ததாக பொய் சொல்லியுள்ளனர்" என்றனர்.

குழந்தை கொலை

இயற்கைக்கு மாறாக மரணமடைந்ததாக போடப்பட்ட வழக்கை போலீஸார் கொலை வழக்காக மாற்றினர். குழந்தையை கொன்றதாக தாய் தீப்தி மீது, கொலை வழக்கு பதிவு செய்ய்யப்பட்டது. தீப்திக்கு ஏற்கெனவே மன நோய் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மனநோய் அறிகுறி இருந்ததால் தீப்தி ஆலப்புழா மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் தீப்தியை கைது செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/7s4Hcpd
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*