இளைஞரின் லவ் டார்ச்சரால் தற்கொலை செய்த இளம்பெண்?! - போலீஸ் விசாரணையில் சிக்கிய மற்றொரு வாலிபர்

0

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ். எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி இந்திரா புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். சத்தியராஜின் இரண்டாவது மகள் காவ்யா (20)(பெயர் மாற்றப்பட்டுள்ளது) கல்லூரியில் பி.ஏ படித்துவிட்டு உயர்கல்வி படிப்பிற்காக தயாராகி வந்தார். இந்த நிலையில் சூழிகோணம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் காவ்யாவை காதலித்து வந்துள்ளார். திவ்யாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திவ்யா திடீரென ரஞ்சித்திடம் பேசாமல் தொடர்பை துண்டித்துள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட பெண்

ரஞ்சித் செல்போன் மூலம் அழைத்தும் காவ்யா போனை எடுக்காததால், அவர் செல்லும் பாதையில் பின்தொடர்ந்து சென்று காதலிக்கும்படி வற்புறுத்தி உள்ளார். காவ்யா திரும்பிப்பார்க்காததால் கோபமான ரஞ்சித், `நாம் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் இருக்கின்றன, அவற்றை சமூக வளைதலங்களில் பதிவிட்டுவிடுவேன்' என மிரட்டியுள்ளார். மேலும் ரஞ்சித் தொடர்ந்து லவ் டார்ச்சர் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி குழித்துறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் காவ்யா தரப்பு சில வாரங்களுக்கு முன் புகார் அளித்திருக்கிறது. போலீஸார் இரண்டு தரப்பையும் அழைத்து விசாரித்துள்ளனர். காவல்நிலையத்தில் இருதரப்பும் சமரசமாக சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்பின் சிறிதுகாலம் அமைதியாக இருந்த ரஞ்சித், கடந்த வாரம் மீண்டும் காவ்யாவை பின்தொடர்ந்து சென்று லவ் டார்ச்சர் கொடுத்துள்ளதாகவும், இதையடுத்து காவ்யாவின் சகோதரன் றோசன் மேத்தியூ, தனது நண்பர்களுடன் சென்று ரஞ்சித்தை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது றோசன் மேத்யூ உள்ளிட்டவர்களை ரஞ்சித் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காவ்யா, நேற்று வீட்டில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார்.

லவ் டார்ச்சரால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் பெண்

இது குறித்து தகவலறிந்த மார்த்தாண்டம் போலீஸார் காவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீஸார் காவ்யாவின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதை தொடர்ந்து இனயத்தைச் சேர்ந்த 19 வயதுள்ள வாலிபர் ஒருவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரஞ்சித் மீதும் வழக்கு பதிவு செய்து போலீஸார் அவரை தேடி வருகின்றனர். உண்மையான குற்றவாழி ரஞ்சித் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் காவ்யாவின் உறவினர்கள் கூறி வருகின்றனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "காவ்யாவுடன் இனயம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் அடிக்கடி போனில் பேசியுள்ளார். ஆகவே அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். தலைமறைவான ரஞ்சித்தையும் தேடி வருகிறோம்" என்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/R4uIGyK
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*