`யார் பெரிய ஆளுன்னு லவுட் ஸ்பீக்கர்ல பாட்டு போட்டு காட்டு' - ஆயிரங்களில் பரிசு; வித்தியாசமான போட்டி!

0

அரசியல், சினிமா, பட்டிமன்றம், ஜல்லிக்கட்டு, கோயில் திருவிழா, ஆட்டம் பாட்டம் என தினம் தோறும் கொண்டாட்டம் போதாதென்று அவர்களாகவே சில விழாக்களை உருவாக்கிக் கொண்டாடு மகிழ்கிறார்கள் மதுரை மக்கள்.

போட்டியில் கலந்துகொண்டவர்கள்

அதில் ஒன்றுதான் பழைய பாடல்களை பழைய ரெக்கார்ட் பிளேயர்களில் லவுட் ஸ்பீக்கர் மூலம் சத்தமாக துல்லியமாக ஒலிபரப்பும் விழா. தேனி, மதுரை மாவட்டங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழா சமீபத்தில் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டில் நடந்தது.

`எம்.எஸ்.வி நற்பணி மன்றம்' நடத்திய இவ்விழாவில் பழைய பாடல்களை இளம் தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில் 3 நாட்களாக பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டது. இந்த விழாவுக்கென காவல்துறையிடமும் ஒப்புதல் பெற்று சில வழிகாட்டல்களுக்குப் பிறகே இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

லவுட் ஸ்பீக்கர் விழா

இதில் பழைய ஒலிபரப்பு கருவிகள் மூலம் பழைய பாடல்களை சத்தமாகவும், துல்லியமாகவும் ஒலிபரப்பு செய்த 5 வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் முதல் பரிசாகத் தனக்கன்குளம் சினேகா ஒலிப்பெருக்கி உரிமையாளருக்கு ரூ.21,000, இரண்டாவதாக திருமங்கலம் செல்வா ஒலிப்பெருக்கி உரிமையாளருக்கு ரூ.15,000, மூன்றாவதாக கோவிலூர் நியூ பராசக்திக்கு ரூ.10,000 நான்காவதாக கோட்டூர் ராயல்ஸ்க்கு ரூ.7000, ஐந்தாவதாக உசிலம்பட்டி ஜெயா ஒலிப்பெருக்கிக்கு ரூ.4,000 எனவும் பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டி

இந்த விழா நடைபெற்ற 3 நாட்களும் ஒவ்வொரு போட்டியாளரும் பாடல்களை ஒலிபரப்பினர். டிஜிட்டல் யுகத்தில் நவீன தொழில்நுட்பத்தில் மிகத் துல்லியமாக இசையை மக்கள் ரசித்து வரும் நிலையில் அதற்கு தாங்கள் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் லவுட் ஸ்பீக்கரில் துல்லியமாக பாடல்களை இசைக்க வைத்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/uxsjCHN
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*