நள்ளிரவில் நடந்த இரட்டைக் கொலை... பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட போலீஸார்! - தூத்துக்குடியில் பதற்றம்

0

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே இருக்கிறது பூதலாபுரம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பிச்சையா என்பவர் மனைவி ராஜாமணி. இவர்களுக்கு இரண்டு மகன்கள். ஒருவர் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். மற்றொரு மகன் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். பிச்சையா, உடல்நலக் குறைவினால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிடவே இரண்டாவது மகனுடன் ராஜாமணி வசித்து வருகிறார்.

கொலை செய்யப்பட்ட பொன்னுச்சாமி - ராஜாமணி

அவரின் இரண்டாவது மகன் நேற்று இரவு ஷிஃப்ட் வேலைக்குச் சென்ற நிலையில், ராஜாமணி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில், நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் திடீரென ரத்த காயங்களுடன் ராஜாமணி அலறி அடித்துக்கொண்டு வீட்டிலிருந்து ஓடி வந்துள்ளார். பின்னர் அங்குள்ள முத்துராமலிங்கத்தேவரின் சிலை அருகே கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவர் உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்துள்ளன.

அப்போது அங்குள்ள மரத்தின் அடியில் தனியர் பஸ்ஸை நிறுத்திய ஓட்டுநர், நடத்துனர் காடல்குடி காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்திக் கொண்டிருந்த நிலையில், அதே ஊரில் பொன்னுச்சாமி என்பவர் வீட்டில் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். பொன்னுச்சாமியின் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நிலையில் அவர் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

கொலை

இரண்டு கொலைகள் தொடர்பாகவும் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு கொலைகளையும் ஒருவரே செய்திருக்கலாம் எனவும் போலீஸார் கூறுகிறார்கள். நள்ளிரவில் ஒரே ஊரில் நடந்த இந்த இரட்டைக் கொலை அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கொலைசெய்யப்பட்ட இருவரும் இரண்டு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்தப் பகுதியில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/G2JNYsM
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*