``சுதந்திர தினத்தில் கொடியேற்ற பாதுகாப்பு கொடுங்கள்!" – காவல்துறைக்குக் கடிதமெழுதிய ஊராட்சித் தலைவர்

0

இந்த ஆண்டு நாட்டின் 75-வது சுதந்திர தின விழா என்பதால், பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றிவைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியிருக்கிறது. இந்த நிலையில் பட்டியலினத்தைச் சேர்ந்த தனக்கு தேசியக் கொடியேற்ற பாதுகாப்பு வழங்குமாறு பெண் ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் காவல்துறைக்குக் கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், எடுத்தவாய்நத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் சுதா வரதராஜ் என்பவர், கள்ளக்குறிசி டி.எஸ்.பி-க்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ``நான் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர். எங்கள் கிராமத்தில் எனக்கு முன்பு 10 ஊராட்சி மன்றத் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள்.

கடிதம்

அவர்கள் அனைவரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் குடியரசு மற்றும் சுதந்திரதின விழாவின்போது தேசியக் கொடியை ஏற்றியிருக்கின்றனர். ஆனால் கடந்த ஆண்டு குடியரசு தின விழாவின்போது சிலர் நான் பட்டியிலினப் பெண் தலைவர் என்பதால் தேசியக் கொடியை ஏற்றவிடாமல் தடுத்து விட்டனர். அதனால் வருகின்ற 75-வது சுதந்திர தினத்தில் எங்கள் ஊர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொடியேற்ற வாய்ப்பு கொடுப்பதுடன், எனக்குப் பாதுகாப்பு வழங்கவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். சமூக வலைதளங்களில் இந்தக் கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சுதா வரதராஜை தொடர்புகொண்டோம். நம்மிடம் பேசிய அவர் கணவர் வரதராஜ், “டி.எஸ்.பி தலைமையில் இன்று மாலை நடக்கவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு எங்களை அழைத்திருக்கிறார்கள். அது முடிந்ததும் பேசுகிறோம்” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/pIlV3hD
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*