Indian 2: தயராகும் பிரமாண்ட செட்; ஷங்கர் - கமலுடன் மீண்டும் இணையும் நடிகர்; கார்த்திக் நடிக்கிறாரா?

0
கமல்- ஷங்கர் - லைகா இணையும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு அடுத்த மாதம் மீண்டும் துவங்குகிறது. அதற்காக வேலைகளை லைகா மும்முரமாக பார்க்க ஆரம்பித்திருக்கிறது.

சிவகார்த்திகேயனின் 'டான்' வெற்றிவிழாவின் போது 'இந்தியன் 2' படப்பிடிப்பு மறுபடியும் தொடங்குவது குறித்து உதயநிதி பேசினார். கமலின் 'விக்ரம்' வசூலில் மகிழ்ந்த அவர், அடுத்தும் கமல் படத்தை வெளியிடுவதில் ஆர்வம் காட்டினார். விரைவில் 'இந்தியன் 2' ஆரம்பிக்கும் என்றார். அவர் சொன்னது போலவே, டாப் கியரில் வேலைகளை நடந்து வருகிறது.

கமல், ஷங்கர், காஜல்

படத்தில் கமல், நெடுமுடி வேணு, விவேக், சமுத்திரகனி, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியாபவானி சங்கர், டெல்லிகணேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் இருக்கிறது. வசனங்களை ஷங்கருடன் இணைந்து ஜெயமோகன், லக்ஷ்மி சரவணகுமார், கபிலன் வைரமுத்து ஆகியோர் எழுதியுள்ளனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்து வந்தார். அனிருத் இசையமைக்கிறார். மீண்டும் படப்பிடிப்பு அடுத்த மாதம் 13-ம் தேதி தொடங்குகிறது என காஜல் அகர்வால் கூறியிருந்தார். இதற்கிடையே நெடுமுடி வேணு மரணமடைந்துவிட்டதால், அவருக்கு பதிலாக அவரைப் போலவே உருவ ஒற்றுமையுள்ள மலையாள நடிகர் ஒருவரை நடிக்க வைக்கிறார்கள். படத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிப்பார் என பேச்சு கிளம்பியிருக்கிறது. ஆனால், இதுகுறித்து தயாரிப்பு வட்டாரத்தில் பேசினால், 'அது உறுதியான தகவல் இல்லை' என பதில் வருகிறது.

கமல்

ஆனால், இன்னொரு விஷயமும் நடந்திருக்கிறது. படத்தில் சத்யராஜ் இணைந்திருக்கிறார். ஷங்கரின் 'நண்பன்' படத்திற்கு பிறகு அவர் இணைந்துள்ளார். சத்யராஜ் வில்லனாக கோலோச்சிய காலங்களில் கமலுடன் `விக்ரம்' , `காக்கிசட்டை' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவர்கள் காம்பினேஷன்கள் அரங்கை அதிர வைத்திருக்கின்றன. அடுத்த மாத படப்பிடிப்பில் கமல், காஜல், சத்யராஜ் ஆகியோரின் காட்சிகள் படமாக்கப் பட உள்ளன.

சத்யராஜ்

சென்னை பிரசாத் லேப்பில் இதற்கான அரங்கம் அமைக்கும் வேலைகள் இன்று முதல் தொடங்குகிறது. கமலுடன் நடிக்க வேண்டும் என விவேக் விரும்பினார். அது 'இந்தியன்2'வில்தான் சாத்தியமானது. விவேக் மறைவிற்குப் பின், அவரது காட்சிகளை நீக்கிவிட்டு வேறு ஒருவரை வைத்து ஷூட் செய்ய உள்ளனர் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், விவேக்கிற்கு இது கடைசி படம் என்பதால், அவர் எத்தனை சீன்களில் நடித்தாரோ அதை அப்படியே படத்தில் வைத்து விடலாம் என இப்போது எண்ணியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.



from தமிழ் சினிமா https://ift.tt/4Vv9CsZ
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*