``ஹெச்.ராஜா 100-க்கு 90 சதவிகிதம் பொய் பேசுபவர்..!" - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கு

0

தமிழ்நாடு அரசு சார்பில் புதுமைப் பெண் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு 6-ம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி படிப்பைத் தொடர்ந்து வரும் மாணவிகளுக்கு வங்கிக் கணக்கு புத்தகத்தை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, ``பா.ஜ.க-வைச் சேர்ந்த ஹெச்.ராஜா பேசும் பேச்சை எல்லாம் உண்மை என்று எடுத்துக்கொள்ள முடியாது. அவர் 100-க்கு 90 சதவிகிதம் பொய்யைத்தான் பேசுவார். அவர் போற போக்கில் ஏதாவது ஒன்றை பேசிவிட்டு செல்பவர். அப்படித்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவர் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு உறுதுணையாக இருப்பதாக குற்றம்சுமத்தியிருக்கிறார்.

நாங்கள் யாருக்கும் ஆதரவாக செயல்படவில்லை. அப்படி அவசியமும் இல்லை. இருப்பினும், இது குறித்து அரசு கவனத்துக்குச் சென்று விசாரணை செய்து, அது உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனாலும், அவர் பொய்யைத்தான் கூறியிருப்பார். அவர் சொன்னது உண்மையா என்று பரிசீலனை செய்தபிறகு, குற்றம்சுமத்திய ஹெச்.ராஜாமீது நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு பின்னர் முடிவு செய்யும்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/9Uwa3Lp
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*