கடலூர்: குழந்தை பெற்று புதரில் வீசிய ப்ளஸ் ஒன் மாணவி - சகோதரன் மீது போக்சோ வழக்கு பதிவு

0

கடலூர் மாவட்டம், புவனகிரியில் அமைந்திருக்கும் அரசு பெண்கள் மாதிரிப் பள்ளியில், சுமார் 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். செப்டம்பர் 1-ம் தேதி வழக்கமான பள்ளி இடைவேளை நேரத்தில் மாணவிகள் கழிவறைக்குச் சென்றனர். அப்போது கழிவறைக்கு அருகில் இருந்த முள் புதரில் எறும்புகள் சூழ பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் ஒன்று கிடந்திருக்கிறது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் ஆசிரியர்களிடம் கூறியிருக்கின்றனர்.

தொடர்ந்து பள்ளி நிர்வாகம் சார்பில் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதையடுத்து அங்கு விரைந்த போலீஸார், குழந்தையின் சடலத்தை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், அந்த குழந்தை குறித்து விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.

போக்சோ

அப்போது அதே பள்ளியில் ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவிக்கு பிறந்த குழந்தைதான் என்பதை கண்டுபிடித்த போலீஸார், அந்த மாணவியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த குழந்தை தனக்கு பிறந்ததுதான் என்று ஒப்புக்கொண்ட அந்த மாணவி, அன்றைய தினம் தனக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் கழிவறைக்கு சென்றேன். அப்போது குழந்தை இறந்து பிறந்ததால் அங்கேயே வீசிவிட்டு வந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.

மேலும் தனது கர்ப்பத்திற்கு காரணம் 10-ம் வகுப்பு படிக்கும் சகோதரன் முறையான உறவினரின் மகன்தான் என்றும் தெரிவித்தார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அதையடுத்து பத்தாம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவனிடமும் விசாரணையை மேற்கொண்டனர். அந்த மாணவனும் சகோதரி உறவான மாணவியின் கர்ப்பத்திற்கு நான்தான் காரணம் என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார். அதையடுத்து அந்த மாணவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 5(j), 5(L) & 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/PWFi5lr
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*