தூத்துக்குடி: தனியார் பள்ளி விடுதியில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை

0

தூத்துக்குடி மாவட்டம்  பசுவந்தனை  அருகேயுள்ள  சில்லாங்குளத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி  செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதியில் தங்கி பயிலும்  மாணவ, மாணவிகளுக்கு விடுதியில் தங்கிட கட்டணம் இல்லாமலும், இலவச உணவும் வழங்கப்பட்டு வருகிறது. ‌ராமநாதபுரம் மாவட்டம் அண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் அதே பள்ளி விடுதியில் தங்கி  12-ம் வகுப்பு அறிவியல் பாடப்பிரிவில் படித்து வந்துள்ளார்.

தற்கொலை

இந்த நிலையில், நேற்று இரவில் விடுதியின்  கழிவறைக்குச் சென்று வருவதாக சக தோழிகளிடம்  சொல்லிவிட்டு சென்றுள்ளார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக  வராததால் வார்டனிடம் சக மாணவிகள் கூறியுள்ளனர். கழிவறையின் கதவைத் தட்டியும் எந்த பதிலும் இல்லாததால், கதவை உடைத்துப் பார்த்துள்ளனர். அங்கு மாணவி கயிற்றினால் தூக்கிட்ட நிலையில்  சடலமாகத் தொங்கியுள்ளார்.

வைத்தீஸ்வரியின் உடலைப் பார்த்து சக மாணவிகள் கண்ணீர்விட்டு கதறியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த பசுவந்தனை காவல் நிலைய போலீஸார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மாணவியின் தாய் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில், அவரின் சித்தியின் பராமரிப்பில் படித்து வந்துள்ளார். அவரும் கடந்த  சில நாள்களுக்கு முன்பு உடல்நலக் குறைவினால் உயிரிழந்துள்ளார். அவரின் துக்க நிகழ்வுக்குச் சென்று பள்ளிக்குத் திரும்பியுள்ளார். அவர் பள்ளிக்கு வந்த நாள் சித்தியைப் பற்றிப் பேசி சக மாணவிகளிடம் புலம்பி வந்துள்ளார். கடந்த 2 நாள்களாக  காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

தனியார் மேல்நிலைப்பள்ளி

இந்த நிலையில்தான்  விடுதியின் கழிப்பறையில் தூக்கிட்டுள்ளார். மாணவி தங்கியிருந்த அறையில் ’ஸ்ரீராமஜெயம்’ என எழுதப்பட்ட ஒரு கடிதத்தினை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி, மணியாச்சி டி.எஸ்.பி லோகேஸ்வரன் ஆகியோர் பள்ளியின் விடுதியில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மாணவியின் தற்கொலைக்கு குடும்ப பிரச்னைதான் காரணமா அல்லது வேறு ஏதும் காரணமா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விடுதியில் மாணவி தூக்கிட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/BwIXLn6
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*