அண்ணியுடன் திருமணம் மீறிய உறவு; சித்தப்பாவைக் கொன்ற இளைஞர் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

0

புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி அருகே கூகனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலையா (45). இவரின் அண்ணன் சுப்பிரமணியன். இவருக்கு குமார், விக்னேஸ்வரன் என்ற மகன்கள் உள்ளனர். குமாருக்குக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.  சில மாதங்களுக்குப் பிறகு வேலைக்காக குமார் வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில், குமாரின் தம்பியான விக்னேஷ்வரன், அண்ணியுடன்  திருமணம் மீறிய உறவில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, விக்னேஸ்வரன், அண்ணியை வெளியூர் அழைத்துச்  சென்று குடும்பம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி தகவலறிந்த குமார், தனது சொந்த சித்தப்பாவான பாலையாவை விட்டு இவரையும் கண்டிக்க வலியுறுத்தியிருக்கிறார். அதன்படி பாலையா, விக்னேஷ்வரனையும் அப்பெண்ணையும் கண்டித்திருக்கிறார். ஆனாலும், இருவருக்கும் இடையே உறவு தொடர்ந்துள்ளது.

இதையடுத்து, அண்ணான சுப்பிரமணியன் வீட்டிற்குச் சென்ற பாலையா, அங்கு இருந்த விக்னேஸ்வரனைத் தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் பாலையாவை, விக்னேஸ்வரன், சுப்பிரமணியன் ஆகியோர் சேர்ந்து அரிவாளால் வெட்டியும், ஈட்டியால் குத்தியும் கொலை செய்தனர். 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த நாகுடி போலீஸார் சுப்பிரமணியன், விக்னேஷ்வரன், இவர்களின் உறவினர் வீரமணி ஆகிய 3 பேரை கைது செய்தனர். 

கடந்த 2020 செப்டம்பர் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம்  தொடர்பான வழக்கு, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது.  இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி அப்துல் காதர் அதிரடித் தீர்ப்பு வழங்கினார்.

 வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுப்பிரமணியன், அவரின் மகன் விக்னேஸ்வரன், உறவினர் வீரமணி  ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும், ஒவ்வொருவருக்கும்  ரூ.2 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். இதையடுத்து 3 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/nWFhYD4
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*