பரம்பிக்குளம் அணை மதகு உடைந்தது... 6 டி.எம்.சி தண்ணீர் வீண்... தவறு நடந்தது எங்கே?!

0

கோவை மாட்டம் பொள்ளாச்சி அருகே தமிழ்நாடு – கேரளா எல்லையில் பரம்பிக்குளம் அணை உள்ளது. 72 அடி கொள்ளளவை கொண்ட இந்த அணையில் 17 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைக்கலாம். கோவை, திருப்பூர் மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக இது விளங்குகிறது. சமீபத்தில் பெய்த தென்மேற்கு பருவமழையால் பரம்பிக்குளம் முழு கொள்ளளவை எட்டியது. 3 மதகுகள் வழியே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

பரம்பிக்குளம்

இந்நிலையில் மதகின் நடுவே இணைக்கப்பட்டிருந்த சங்கிலி அறுந்தது. தொடர்ந்து அங்கிருந்த சுவர் இடிந்து மதகின் மீது விழுந்தது. இதில் மதகு சேதமடைந்து உடைந்துவிட்டது. இதன் காரணமாக தண்ணீரில் சீறிப்பாய்ந்து வெளியறிக் கொண்டிருக்கிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, நீர்வளத்துறை முதன்மை செயலாளர் சந்தீப் சக்சேனா, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கேரளா நென்மாறா சட்டமன்ற உறுப்பினர் கே.பாபு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தண்ணீர் அதிகளவு வெளியேறுவதால் கேரளா சாலக்குடியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது வினாடிக்கு 16,000 கனஅடி தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.  தண்ணீர் வெளியேறுவது முழுமையாக நின்ற பிறகுதான் மதகை சரி செய்ய முடியும்.

அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

அதற்குள் 6 டி.எம்.சி தண்ணீர் வீணாகக் கடலில் தான் கலக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் இளங்காவன் கூறுகையில், “அணைகளின் கதவுகளை இயக்கவும் பராமரிக்கவும் பாசன உதவியாளர்கள் இருப்பார்கள். பல்வேறு காரணங்களால் இவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. துறையில் இயந்திரப் பொறியாளர்கள் இருந்தார்கள். இன்று அவர்கள் இல்லை.

பழுதானால் ஒப்பந்தக்காரரை எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலை. பெரிய ஒப்பந்தம் இல்லாமல் அவர்கள் பணி செய்ய மாட்டார்கள். முறையான கதவுகள் பணிகள் செய்யும் ஒப்பந்தக்காரர்களின் பட்டியல் ஒன்றை தயார் செய்ய வேண்டும். ஒவ்வொரு மண்டலத்திற்கும் என வேலைகளை பிரித்து தர வேண்டும்.

மதகு உடைந்து தண்ணீர் பாய்ந்து செல்லும் காட்சி

அணைகளில் பணிபுரியும் உதவிப்பொறியாளர்களுக்கும் கடைநிலை ஊழியர்களுக்கும் முறையான களப்பயிற்சி பட்டறை பயிற்சி  அளிக்க வேண்டும். தற்போதுள்ள சமூக சூழலில் பாரம்பரிய பணிகளுக்கான பயிற்சி அவசியம்.” என்றார்.

இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த நிகழ்வு மிகவும் வருத்தத்துக்குரியது. இப்படிப்பட்ட நிகழ்வு இதற்கு முன்பு நடந்ததில்லை. தண்ணீர் கட்டுக்கடங்காமல் வெளியேறுவதை பார்க்கும்போது வேதனையில் மனம் துடிக்கிறது. எப்படியும் 6 டி.எம்.சி தண்ணீர் வீணாகிவிடும்.

துரைமுருகன்

பாசனத்துக்கு பிரச்னை இல்லாமல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வரிடம் கலந்து பேசி போர்கால நடவடிக்கை அடிப்படையில் சரி செய்யப்படும். மற்ற மதகுகளையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/gy5Go3B
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*