புதுக்கோட்டை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 8 மீனவர்கள் கைது! - தொடரும் இலங்கை கடற்படையின் கைது

0

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 87 விசைப்படகுகளில் 300 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில் தமிழ்ச்செல்வன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் சிலர் 22 நாட்டிகல் மைல்தொலைவில் நெடுந்தீவு அருகே விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வன், விஜி, தினேஷ், ரஞ்சித், பக்கிரிசாமி, கமல், புனுகு, கார்த்திக் உள்ளிட்ட எட்டு மீனவரையும் படகுடன் சிறைபிடித்து விசாரணைக்காக இலங்கை காரைநகருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

எட்டு மீனவர்களை ஒரே நேரத்தில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது ஜெகதாப்பட்டினம் மீனவ கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி கோட்டைப்பட்டினம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/50bwnP2
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*