திலீப் ஜோடியாக தமன்னா மலையாளத்தில் அறிமுகம்; கொட்டாரக்கரா கோயிலில் நடந்த பட பூஜை!

0

தென்னிந்திய நடிகையான தமன்னா மலையாள சினிமாவில் இதுவரை நடித்தது இல்லை. முதன் முதலாக மலையாள சினிமாவில் நடிகர் திலீப் ஜோடியாக நடிக்க உள்ளார். வெற்றிப்படமான ராமலீலா-வுக்கு பிறகு இயக்குநர் அருண் கோபி, நடிகர் திலீப் கூட்டணியில் உருவாகும் புதிய மலையாள சினிமாவுக்கான பூஜை கொட்டாரக்கரா காணபதி கோயிலில் இன்று நடந்தது. கதாநாயகன் திலீப் பட்டு வேட்டி, வெள்ளை சட்டையில் வந்திருந்தார். திலீபுக்கு ஜோடியாக நடிக்கும் தமன்னா-வும் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டுவிட்டு சினிமாவுகான பூஜையில் கலந்துகொண்டார். திலீபும், தமன்னாவும் குத்துவிளக்கு ஏற்றி பூஜையை தொடங்கிவைத்தனர்.

சினிமா பூஜையில் திலீப், தமன்னா
ஃபஸ்ட் கிளாப் அடித்து ஷூட்டிங்கை தொடங்கி வைத்த தமன்னா-திலீப்

விநாயகா பிலிம்ஸ் பேனரில் விநாயகா அஜித் இந்த சினிமாவை தயாரிக்கிறார். விநாயகா அஜித் சுவிட்ச் ஆன் செய்ய, திலீப், தமன்னா இணைந்து ஃபஸ்ட் கிளாப் அடித்து ஷூட்டிங்கை தொடங்கி வைத்தனர். பெரிய பட்ஜெட்டில் தயாராகும் பான் இந்தியன் சினிமாவாக இது இருக்கும் என கூறப்படுகிறது. வட இந்தியாவில் நடக்கும் சம்பவத்தை மையமாகக்கொண்ட சினிமா என்பதால் குஜராத், மும்பை, ஜார்கண்ட் உள்ளிட்ட பகுதிகளில் பெயரிடப்படாத இந்த சினிமாவின் படபிடிப்பு நடக்க உள்ளது.

நடிகர் திலீபின் 147-வது சினிமா இது. இதையடுத்து #D147 என்ற ஹேஸ்டேக்குடன் இந்த சினிமா பூஜை-க்கான போட்டோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

ஷூட்டிங் பூஜையில் திலீப், தமன்னா

மாஸ் சினிமாக்களுக்கு திரைக்கதை எழுதியுள்ள உதய கிருஷ்ணா இந்த சினிமாவுக்கும் திரைக்கதை எழுதியுள்ளதால் திலீப் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த சினிமாவில் சித்திக், ஜோணி ஆன்றணி, வீணா நந்தகுமார் உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள்.



from தமிழ் சினிமா https://ift.tt/wLsWjKh
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*