கபிலன் மகள் தூரிகை பூட்டிய வீட்டில் சடலமாக மீட்பு!

0

பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை கபிலன் சென்னையில் இன்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு வயது 27 என சொல்லப்படுகிறது.

விஜய்யின் ‘ஆல் தோட்ட பூபதி‘ பாடலின் மூலம் பிரபலமானவர் பாடலாசிரியர் கபிலன். தமி்ழ் சினிமாவில் நிறைய பாடல்கள் எழுதியிருக்கிறார். கமலின் ‘தசாவதாரம்‘ படத்தில் நடித்திருப்பார். மிஷ்கினின் நண்பரான கபிலன், ‘பிசாசு 2‘விலும் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

தூரிகை கபிலன்

கபிலனின் மகள் தூரிகை கபிலன் காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிந்து வந்தார். பீயிங் வுமன் என்ற இணைய இதழையும் நடத்தி வந்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ், சேரன் உள்பட திரையுலகினர் பலருக்கும் காஸ்ட்யூம் டிசைனராகவும், சில கான்சப்ட் ஷூட்களிலும் பணியாற்றியிருக்கிறார். மிகவும் தைரியமும் பெண்ணியவாதியுமான தூரிகை திடீரென தற்கொலை செய்து கொண்டதை கேள்வியுற்ற திரையுலகினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று மாலை 4.30 மணியளவில் அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அதன்பின் சாலிக்கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகச் சொல்கிறார்கள். தூரிகையின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. மருத்துவ பரிசோதனைக்காக அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.



from தமிழ் சினிமா https://ift.tt/h6ufUA4
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*