திமுக-வில் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் நியமனம் தான் ஹாட் டாப்பிக்காக உள்ளது. நேற்று இரவு திமுக தலைமை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டதும், உடன்பிறப்புகள் பலரும் உற்சாமாகியுள்ளனர். கோவை மாநகர் மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ நா.கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
துணைச் செயலாளர்களாக பொதுப் பிரிவில் கோட்டை அப்பாஸ், ஆதிதிராவிடர் பிரிவில் தளபதி இளங்கோ, மகளிர் பிரிவில் எஸ். கல்பனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தனக்கு மாவட்ட துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது தொடர்பாக நன்றி தெரிவித்து கல்பனா, தன் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில் முதல்வர் மு.க. ஸ்டாலின், உதயநிதி, அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
அந்தப் பதிவில் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கார்த்திக்கின் மனைவியும், கோவை மாநகரட்சி கிழக்கு மண்டலத் தலைவருமான லக்குமி இளஞ்செல்வி, “ஏன் மாவட்ட செயலாளர் உங்களை பரிந்துரை செய்யவில்லையா?” என்று கமென்ட்டில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதையடுத்து அந்தப் பதிவில், “எனது பெயரை பரிந்துரை செய்த கோவையின் நம்பிக்கை, தொய்வில்லா களப்பணியில் சாதனையாளர், மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் அவர்களுக்கு இதயம் கனிந்த நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று இணைத்துள்ளார்.
“இப்பத்தான் பதவியே போட்டாங்க.. அதுக்குள்ள ஆரம்பிச்சுட்டீங்களா?” என்று உடன்பிறப்புகள் கமென்ட் அடித்து வருகின்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/f0Nc3ro
via
