பிரதமர் மோடிக்காக இன்று நாள் முழுவதும் இலவச சேவை! - நெல்லை ஆட்டோ டிரைவரின் மோடி பாசம்

0

நெல்லை மாநகரம் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன். நெல்லை மாநகராட்சி 1-வது வார்டு பா.ஜ.க தலைவராக உள்ளார். பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளரான அவர் பிரதமரின் 72-வது பிறந்தநாளான இன்று தனது ஆட்டோவில் ஏறும் பயணிகளை இலவசமாக அழைத்துச் செல்வதாக அறிவித்துள்ளார்.

ஆட்டோ டிரைவர்

அதனால் அவரது ஆட்டோவில் ஏறுவதற்கு பயணிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனாலும் முகம் சுளிக்காமல் அவர் பயணிகளை அவர்கள் விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார். இது குறித்து மணிகண்டனிடம் பேசியபோது, “நான் இரு வருடங்களுக்கு முன்பு தான் பா.ஜ.க-வில் சேர்ந்தேன். எனக்கு பிரதமர் மோடியின் செயல்கள் பிடித்ததன் காரணமாகவே கட்சியில் சேர்ந்து பணியாற்றுகிறேன்.

மோடி எனக்குப் பிடித்த தலைவர் என்பதால் அவரின் பிறந்தநாளில் ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அதனால் எனது ஆட்டோவில் ஏறுபவர்களை இலவசமாக அழைத்துச் செல்ல முடிவெடுத்தேன். எனது இந்தச் செயலுக்கு குடும்பத்தினரும் ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். அதனால் இன்று நாள் முழுவதும் இலவச சேவை மேற்கொள்வேன்” என்றார்.

ஆட்டோ டிரைவர் மணிகண்டன் இன்று முழுவதும் இலவச ஆட்டோ ஓட்டுவதாக அறிவித்து இருப்பதற்கு சக ஆடோ ஓட்டுநர்கள் ஆதரவும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர். அவரின் இந்த அறிவிப்பு குறித்து நெல்லை நகரில் உள்ள வாட்ஸ் அப் குழுக்களிலும் தகவல்கள் வேகமாக பரவி வருகிறது.!



from மாவட்ட செய்திகள் https://ift.tt/g7NcflV
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*