சக விடுதி பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பிய கல்லூரி மாணவி! - இருவரும் கைது

0

விடுதியில் தங்கியிருக்கும் சக பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பிவந்த கல்லூரி மாணவி கைதுசெய்யப்பட்டிருக்கும் சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உமா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்தவர் உமா (மாற்றப்பட்டிருக்கிறது). இவர் மதுரை அண்ணா நகரிலுள்ள பெண்கள் விடுதி ஒன்றில் தங்கியிருந்து பி.எட் படித்து வருகிறார்.

இவர் கமுதியிலிருந்தபோது அங்கு கிளினிக் வைத்திருக்கும் டாக்டர் ஆசிக் என்பவருடன் பழகி வந்துள்ளார். மதுரை வந்த பின்பும் இருவரும் மொபைலில் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். டாக்டர் ஆசிக் ஏற்கெனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், உமா விடுதியில் தங்கியிருக்கும் சகப் பெண்களை அவர்களுக்குத் தெரியாமலே ஆபாசமாக வீடியோ எடுத்து வந்துள்ளார்.

டாக்டர் ஆசிக்

இதை சமீபத்தில் விடுதியிலுள்ள சில பெண்கள் கண்டுபிடித்து விடுதி காப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அவர் உமாவின் மொபைலை வாங்கி சோதனை செய்தபோது அதில் பல வீடியோக்கள் இருப்பது தெரியவந்தது.

உடனே விடுதி காப்பாளர் அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். அதையடுத்து உமாவை சைபர் க்ரைம் பிரிவினருடன் சேர்ந்து போலீஸ் விசாரித்தது. போலீஸ் விசாரணையில், ``என்னுடைய நண்பர் ஆசிக் கேட்டுக்கொண்டதால்தான் விடுதியில் தங்கியிருக்கும் பெண்கள் உறங்கும்போது, குளிக்கும்போது, உடை மாற்றும்போது, அவர்களை ஆபாசமான கோலத்தில் வீடியோ எடுத்து தினமும் அவருக்கு அனுப்பிவந்தேன்" என்று தெரிவித்ததைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தார்கள்.

ஆபாச வீடியோ

உமாவின் மொபைலில் விடுதிப் பெண்களின் ஏகப்பட்ட வீடியோக்கள் இருந்துள்ளன. பலவற்றை அவர் அனுப்பிவிட்டு அழித்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. அதையடுத்து, கமுதியிலிருக்கும் டாக்டர் ஆசிக்கை விசாரித்த போலீஸ், அவருடைய மொபைலில் சேகரித்து வைத்திருந்த வீடியோக்களை கைப்பற்றினர்.

தொடர்ந்து இருவர்மீதும் வழக்கு பதிவுசெய்த போலீஸார், அவர்களைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/MF0NrD3
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*