Mallipoo தான் என் பேவரைட்டும்; அது எப்படி உருவாச்சுனா... - பாட்டின் ரகசியம் சொன்ன சிம்பு

0

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த `வெந்து தணிந்தது காடு' படம் கடந்து வாரம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சிம்பு, இப்படம் குறித்தும் படத்தின் வெற்றி குறித்தும் மகிழ்ச்சியாகப் பேசியிருந்தார்.

சிம்பு

இது பற்றி பேசிய அவர், "இந்தப் படம் ஒரு எக்ஸ்ப்ரிமென்டலான படம். இதில் வழக்கமான ஹீரோ பில்டப்கள் இல்லை. இதனால் இந்தப்படத்தை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் இப்போ இப்படத்திற்கான வரவேற்பைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 'மறக்குமா நெஞ்சம்' பாட்டு வந்ததும் இந்தப் பாட்டு கண்டிப்பா ஹிட் ஆகும் என்று தெரியும். ஆனால் என்னுடைய பேவரைட் `மல்லி பூ...' பாட்டுதான். சூட்டிங் பண்ணும்போதே இயக்குநர் கௌதம் கிட்ட சொன்னேன், 'இந்தப் பாட்டு தியேட்டரில் வரும்போது நல்ல வரவேற்ப்பு இருக்கும்' என்று உறுதியாகச் சொன்னேன். அதே போல நடந்தது. அதற்குக் காரணம் ரஹ்மான் சார் தான்." என்று கூறினார்.



from தமிழ் சினிமா https://ift.tt/vDNnfzU
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*