புதுச்சேரி: 20 மணி நேரமாக தொடரும் மின் தடை! - ஊழியர்கள்மீது வழக்கு; தொடர் போராட்டத்தில் மக்கள்

0

புதுச்சேரியில் மின்துறை தனியார்மயமாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 5 நாள்களாகப் போராட்டம் தொடரும் நிலையில், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட பிராந்தியங்கள் முழுவதும் நேற்று மாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனால் மக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மக்களுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ-க்களும் மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டங்களில் ஈடுபட்டதால் புதுச்சேரி முழுவதும் நேற்று இரவு பதற்றம் நிலவியது. மின் தடை குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், புதுச்சேரியிலுள்ள துணை மின் நிலையங்களில் அத்துமீறி நுழைந்து மின்துறை ஊழியர்கள் மின் இணைப்புகளை துண்டித்துவிட்டுச் சென்றது தெரியவந்தது.

சாலை மறியலில் மக்கள்

அதையடுத்து மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அதையடுத்து மத்திய மின் மைய அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, துணை மின் நிலையங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதையடுத்து நகரப் பகுதிளில் மட்டும் நேற்று இரவு மின் இணைப்பு வழங்கப்பட்டது, ஆனால் கிராமப்புறங்களில் சுமார் 20 மணி நேரமாக மின் தடை நீடித்து வருகிறது. அதனால் கிராமப்புறங்களில் மக்கள் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் புதுச்சேரி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. மேலும் மின் இணைப்பை துண்டித்த ஊழியர்கள்மீது 5 பிரிவுகளின் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. மேலும் தலைமறைவாக இருக்கும் மின்துறை ஊழியர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/q4Y8BkR
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*