`பி.எஃப்.ஐ அமைப்புடன் தொடர்பில் இருந்த 873 போலீஸார்’... கேரள டிஜிபி-யிடம் பட்டியல் கொடுத்த என்.ஐ.ஏ

0

பாப்புலர் ஃபிரென்ட் ஆஃப் இந்தியா என்ற பி.எஃப்.ஐ அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் நடந்த என்.ஐ.ஏ சோதனையைத் தொடர்ந்து அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. நாட்டிற்கு எதிராக பயங்கவாத அமைப்புக்கு நிதி கைமாறியதாக பி.எஃப்.ஐ அமைப்பு மீது குற்றச்சாட்டு எழுந்ததுதுடன் என்.ஐ.ஏ சோதனையில் அதற்கான ஆதாரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பி.எஃப்.ஐ அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வருகின்றன. பி.எஃப்.ஐ அமைப்பு கேரள மாநிலத்தில் தொடங்கப்பட்டது என்பதால் என்.ஐ.ஏ அமைப்பு அந்த மாநிலத்தில் தொடர்ந்து தகவல்களை திரட்டி வருகிறது. துறைமுகத் துறை அமைச்சர் அஹமத் தேவர் கோவிலுக்கும்(Ahamed Devarkovil) பி.எஃப்.ஐ அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக பா.ஜ.க மாநில தலைவர் கே.சுரேந்திரன் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் பி.எஃப்.ஐ அமைப்புடன் கேரள மாநில காவல் துறையில் 873 போலீஸாருக்கு தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ பட்டியலிட்டுள்ளது.

கேரள டிஜிபி அனில் காந்த்

ரகசியமாக சேகரித்த பி.எஃப்.ஐ ஆதரவு போலீஸாரின் பட்டியலை கேரள மாநில டி.ஜி.பி அனில் காந்த் வசம் ஒப்படைத்துள்ளது என்.ஐ.ஏ. அந்த பட்டியலில் எஸ்.ஐ-க்கள், சிவில் போலீஸ் ஆப்பீசர்கள், உளவுத்துறையைச் சேர்ந்தவவர்கள் பல்வேறு ரேங்கில் உள்ள அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். அந்த போலீஸ் அதிகாரிகளின் வருவாய் குறித்தும், அவர்களின் பண பரிவர்த்தனைகள் குறித்தும் என்.ஐ.ஏ ஆதாரங்களை சேகரித்துள்ளன. எனவே விரைவில் பி.எஃப்.ஐ அமைப்புடன் தொடர்பில் உள்ள போலீஸார் மீது நடவடிக்கை பாய உள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

கேரள போலீஸ்

தொடுபுழா அருகே உள்ள கரிமண்ணூர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளின் பட்டியலை சேகரித்து பிஎஃப்ஐ நிர்வாகிகளுக்கு வழங்கிய போலீஸ் அதிகாரி ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். அதுபோல, மூணாறு காவல் நிலையத்தில் பி.எஃப்.ஐ அமைப்புடன் தொடர்பில் இருந்த போலீஸ் அதிகாரி உள்ளிட்ட மூன்றுபேர் இடம் மாற்றம் செய்யப்பட்ட சம்பவமும் இதற்கு முன்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/z1r9nlR
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*