கோவை மூதாட்டி விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவிய டி.எஸ்.ஆர்... மறுக்கும் போலீஸ்... நடந்தது என்ன?

0

மகளிருக்கு அரசுப் பேருந்தில் கட்டணமில்லா பயணம் குறித்து, அமைச்சர் பொன்முடி ஓ.சி என்று கூறியிருந்தார். இதனிடையே, கோவை மதுக்கரை அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு துளசியம்மாள் என்கிற மூதாட்டி ஓர் பேருந்தில் ஏறினார்.

கோவை அதிமுக கூட்டத்தில் மூதாட்டி

நடத்துனர் இலவச பயணத்துக்கான சீட்டை கொடுத்தபோது அதை வாங்காமல், “எனக்கு ஓ.சி தேவையில்லை.” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

இதனிடையே, அதிமுக ஐ.டி விங்கைச் சேர்ந்த பிரித்திவிராஜ் என்பவர் மூதாட்டியை தூண்டி, வீடியோ எடுத்து அதைத் திட்டமிட்டு சமூகவலைதளங்களில் பரப்பியதாக திமுகவினர் புகார் கூறினர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் துளசியம்மாள் அதிமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட புகைப்படங்களும் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.

சமூகவலைதளங்களில் பரவும் டி.எஸ்.ஆர்

இதையடுத்து பிரித்திவிராஜ், மதிவாணன், விஜயானந்த் மற்றும் துளசியம்மாள் ஆகியோர் மீது மதுக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்ததாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் டி.எஸ்.ஆர் காப்பி ஒன்றும் சமூகவலைதளங்களில் வைரலானது. ஆனால் மூதாட்டி துளசியம்மாள் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி பத்ரிநாராயணன், ”மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வரும் தகவல் முற்றிலும் தவறானது.

எஸ்.பி பத்ரி நாராயணன்

மதுக்கரை காவல் நிலையம் உள்பட கோவை மாவட்டத்தில் எங்கும் அவர் மீது வழக்குப் பதியவில்லை. சமூக வலைதளங்களில் பொய்யாக பரவும் தகவல் குறித்து விசாரணை நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/FmrSs96
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*