"சாக்‌ஷி சொன்ன ஒன்லைன், தோனி கொடுத்த இன்புட்ஸ்!"- சீக்ரெட்ஸ் சொல்லும் இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி

0

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, இப்போது படத் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கிறார். தோனியும் அவரது மனைவி சாக்‌ஷி சிங்கும் இணைந்து 'தோனி என்டர்டெயின்மென்ட்' என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். தமிழ் உட்படப் பல மொழிகளிலும் படங்கள் தயாரிக்கும் திட்டத்தில் உள்ளனர். முதல் தயாரிப்பை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார் என அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இவர் தோனியை ஹீரோவாக வைத்து 'அதர்வா தி ஆர்ஜின்' என்ற பெயரில் கிராபிக் நாவல் ஒன்றைத் தயாரித்தவர். புதுப்பட வாய்ப்பு குறித்து ரமேஷ் தமிழ்மணிக்கு வாழ்த்துகள் தெரிவித்துவிட்டு, அவருடன் பேசினேன்.

அறிவிப்பு
தொடர்ச்சி..

"எங்களோட 'அதர்வா தி ஆர்ஜின்' பிரமாண்டமான ஒரு புது முயற்சி. சமகாலத்திய தொடர்புடைய இந்தியாவின் முதல் புராண சூப்பர் ஹீரோவை பற்றியது. அதில் தோனி பங்கேற்றது சந்தோஷமா இருந்துச்சு. தோனி உட்படப் பல சூப்பர் கேரக்டர்கள் அந்த நாவலில் உலா வரும். 150 வண்ணப்படங்களை உருவாக்கியிருந்தோம். அதெல்லாம் தோனியை ரொம்பவே கவர்ந்ததுடன் பெரிதும் பாராட்டினார். அதிலிருந்து அவருடன் தொடர்பில் இருக்கேன்.

சாக்‌ஷி சிங் பிரமாதமான ஒன்லைன் ஒன்றை எழுதியிருந்தாங்க. அதை படமா பண்ணப் போறதாகவும், அதோட கதை லைனை கேட்குறீங்களான்னும் என்கிட்ட கேட்டாங்க. நானும் அந்த ஒன்லைனை டெவலப் பண்ணி முழுக்கதையாக்கினேன். அதை சாக்‌ஷிகிட்ட சொன்னேன். தோனியும் உடனிருந்து கேட்டார். அவங்களுக்குக் கதை பிடிச்சிருந்தது. கதை முழுவதையும் கேட்டுட்டு 'நீங்களே இயக்கினாதான் சரியா வரும்'ன்னு சொல்லி, இயக்கவும் சொல்லிட்டாங்க. இது ஃபேமிலி என்டர்டெயினர். மனதை இதமாக்குற ஒரு ஃபீல் குட் மூவியா இதைக் கொண்டு வர்றோம்.

சூப்பர் ஹீரோவாக தோனி

நான் ஸ்டோரி டிஸ்கஷன் பண்றப்ப, தோனியும் கூடவே இருந்து அவரோட இன்புட்ஸ்களையும் கொடுத்தது சந்தோஷமா இருந்தது. படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேர்வுகள் இனிதான் இருக்கும். நடிகர்கள் முடிவானதும் அதிகாரபூர்வமாகத் தெரிவிப்பேன்'' என்கிறார் ரமேஷ் தமிழ்மணி.

தோனி என்டர்டெயின்மென்ட், அடுத்தடுத்து தமிழ்ப் படங்களைத் தயாரிக்க உள்ளது என்பது கூடுதல் தகவல்.


from தமிழ் சினிமா https://ift.tt/asCUOzt
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*