`குடிமைப் பணித் தேர்வுக்கு தயாராவது எப்படி?'- அனுபவம் பகிரும் கோவை மாநகராட்சி ஆணையர்

0

ஆனந்த விகடன் மற்றும் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1,2 தேர்வுகளில் வெல்வது எப்படி? என்று இலவசப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் ஏற்கெனவே சென்னை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இந்தப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டுள்ளது.

கோவை பயிற்சி முகாம்

இந்நிலையில், வருகிற அக்டோபர் 30ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி அரங்கில் இந்தப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சமீரன், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாட உள்ளனர்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் மு. பிரதாப் ஐ.ஏ.எஸ் கூறுகையில், “தற்போது அரசாங்கப் பணி என்பது, இளைஞர்கள் மத்தியில் அதிகம் வசீகரிக்கும் துறையாக உள்ளது. 1980, 90களைவிட இப்போது பள்ளி, கல்லூரி படிக்கும்போதே போட்டித் தேர்வுகளை எழுதி அரசாங்கப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ளனர். அரசாங்கப் பணியை பொறுத்தவரை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் மத்திய தேர்வாணையம் மூலம் நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

குடிமைப் பணித் தேர்வு

அவற்றில் 1,000 பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதில் நிறைய சந்தேகங்கள், அச்சம், குழப்பம் மாணவர்களுக்கு இருக்கும். அதில் வெற்றி பெற்றவர்கள் அந்த அனுபவங்களை கூறும்போதுதான், மாணவர்களுக்கு அது விலகி தன்னம்பிக்கை பிறக்கும். முதல்நிலைத் தேர்வுக்கு என்ன படிக்க வேண்டும், முதன்மைத் தேர்வுக்கு என்ன புத்தகங்கள் படிக்க வேண்டும், நேர்காணலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என பல்வேறு நுணுக்கங்கள் உள்ளன.

அரசுப் பணிக்கு வந்தப்பிறகு கஜா புயல் காலக்கட்டத்தில் பணியாற்றிய அனுபவங்கள், 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2022 உள்ளாட்சித் தேர்தலின்போது தேர்தல் நடத்தும் அலுவலராகப் பணியாற்றிய அனுபவங்கள் உள்ளன. ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றியபோது 30 நாள்களில் 1,000 பண்ணைக்குட்டைகளை செய்து உலக சாதனை படைத்தோம்.

கஜா புயல்

மாநகராட்சிக்கு வந்தப் பிறகு அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைப்பது எப்படி, மக்கள் பிரதிநிதிகளுடன் எப்படி பணியாற்றிய வேண்டும் போன்ற பல்வேறு அனுபவங்களை நேரில் பகிர ஆர்வமாக உள்ளேன்.” என்றார்.

முன்பதிவுக்கு...



from மாவட்ட செய்திகள் https://ift.tt/6ojnkrP
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*