ஸ்கூட்டியிலிருந்து வெளியே தலையை நீட்டிய பாம்பு; மிரண்டு போன இளம்பெண்! - பரபரப்பான சிக்னல்

0

கரூர் மாவட்டம், பவித்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்யா. இவர், தன் குழந்தையையும், அவர் தாயையும் தனது ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தில் அமரவைத்துக்கொண்டு கரூர் வந்துள்ளார். கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே வந்தபோது, அவரது இருசக்கர வாகனத்தின் முன் பகுதியிலிருந்து திடீரென பாம்பு ஒன்று வெளியேறியதைக் கண்டு அச்சமடைந்தவர், வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி ஓடினார். அந்த வாகனத்தில் அமர்ந்திருந்த அவர் தாயும், குழந்தையும் அலறியபடி தூரமாகச் சென்று நின்றுகொண்டனர். அருகில் சிக்னலில் நின்ற மற்ற வாகன ஓட்டிகளும் அதிர்ச்சியடைந்தனர்.

வாகனத்தில் இருந்த பாம்பு

உடனடியாக, அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலறிந்து வந்த கரூர் தீயணைப்புத் துறையினர் அந்த இருசக்கர வாகனத்திலிருந்து உதிரி பாகங்களை ஒவ்வொன்றாகப் பிரித்து எடுத்தப் பிறகு அடியிலிருந்த பாம்பு மாட்டிக்கொண்டது. சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இரண்டு அடி நீளமுள்ள அந்த சாரை பாம்பை மீட்டனர். ரவுண்டானா அருகே இருசக்கர வாகனத்திலிருந்த பாம்பை பிடிக்க முயன்றபோது, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு வேடிக்கை பார்த்தனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தை முழுவதுமாக பிரித்து விட்டதால், வாகனத்தை ஓட்டிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

பின்னர், அந்தப் பெண் இருசக்கர வாகன பழுது நீக்குபவரை வரச் சொல்லி, ஸ்கூட்டியில் கழற்றப்பட்ட உதிரிபாகங்களை மறுபடி மாட்ட வைத்தபின், வாகனத்தில் தன் தாயையும், குழந்தையையும் ஏற்றிக்கொண்டு பயணித்தார். '`இது மழைக்காலம். இனி, பாம்புகள் வெளியில் அடிக்கடி நடமாடும். அதனால், வாகனங்களை தங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலோ நிறுத்தும்போது, பாம்புகள் வராத பகுதியாக பார்த்து நிறுத்துவது நல்லது. விஷப்பாம்புகள் வண்டிகளில் புகுந்துகொண்டால், வண்டியை இயக்கும் சமயத்தில் வெளியில் வந்து, வாகன ஓட்டிகளை கடித்து, ஆபத்து விளைவிக்க வாய்ப்புள்ளது.

வாகனத்தில் இருந்த பாம்பு

அதனால், கவனமாக வாகனங்களை நிறுத்த வேண்டும். அதேபோல், வாகனத்தை இயக்கும் முன்பு, வாகனத்தின் டேங் கவர், இன்ஜின் பகுதி, சீட்டுக்கு அடிப்படுகுதி, மர்க்காடு என்று பல பகுதிகளிலும் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் எதுவும் இருக்கிறதா என்பதை செக் செய்துவிட்டு, வாகனத்தை இயக்குவது நல்லது" என்று தீயணைப்புத்துறையினர் எச்சரிக்கை செய்கிறார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/MZcX6E1
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*