புதுக்கோட்டை: சிறுமியை தனியே அழைத்த காதலன்; அத்துமீறிய நண்பர்கள் - போக்சோ வழக்கில் மூவர் கைது!

0

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா(22) என்பவரும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த 25-ம் தேதி இரவு சிறுமியை தனியாக வெளியே வரும்படி கூறியுள்ளார் ராஜா. சிறுமியும் வந்திருக்கிறார். அப்போது சிறுமியை தனியாக ஒரு இடத்திற்கு கூட்டிச் சென்றிருக்கிறார். அங்கு, இருவரும் தனியாக பேசிக்கொண்டிருந்த போது, ராஜாவின் நண்பர்கள் சின்ராஜ், பிரசாத் ஆகியோர் வந்திருக்கின்றனர். சிறிது நேரத்தில் மூவரும் சேர்ந்து கூட்டாக, சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

மேலும் இதனை வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டி வீட்டுக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டிற்குச் சென்ற சிறுமி, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

உடனே இதுகுறித்து அறிந்த அவரின் உறவினர்கள், சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கீரமங்கலம் போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சின்ராஜ், பிரசாத் இருவரையும் கைது செய்தனர். முக்கிய குற்றவாளி ராஜா தலைமறைவாகினார். இந்த நிலையில் தான் தலைமறைவான ராஜாவை கைது செய்த போலீஸார் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ராஜாவை 14 நாள் சிறை காவலில் அடைக்க நீதிபதி சத்யா உத்தரவிட்டார். சிறுமியை நண்பர்கள் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் கீரமங்கலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/5fbolvm
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*