`நயன்தாராவும் நானும் அம்மா; அப்பா ஆகிவிட்டோம்' - ட்விட்டரில் பகிர்ந்த விக்னேஷ் சிவன்

0

கோலிவுட் கியூட் ஜோடிகளான நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் 9ம் தேதி காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின்பு ஜாலியாக உலக நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தனர். இந்நிலையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது என்று டிவிட்டரில் நெகிழ்சியாகப் பதிவிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

இது பற்றி விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில், "நயன்தாராவும் நானும் அம்மா அப்பா ஆகிவிட்டோம். பிரார்த்தனை, ஆசீர்வாதங்கள், நல்ல செய்கள் என எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசிர்வதிகப்பட்ட அழகான இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. உங்களின் ஆசீர்வாதமும் எங்களுக்கு வேண்டும்" என்று நிகிழ்சியாகப் பதிவிட்டுள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவருக்கும் தாங்கள் வாழ்த்துகளைக் கூறிவருகின்றனர்.



from தமிழ் சினிமா https://ift.tt/IE3gCQL
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*