31 ஆண்டுகளுக்குபின் விடுதலை ஆனார் நளினி... முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமாரும் விடுதலை!

0

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதையடுத்து, மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

ஆறு பேரை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, சிறை நிர்வாகத்திடம் நளினி தனது பரோலை ரத்து செய்யும்படி கடிதம் அளித்தார். இந்த நிலையில், சிறை நடைமுறைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து வேலூர் பெண்கள் தனி சிறையில் இருந்து நளினி இன்று விடுதலையானார். மேலும் நளினியை தொடர்ந்து முருகன், சாந்தன் ஆகியோரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் சிறை நடவடிக்கைகள் முடிந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டனர். நளினி தவிர மற்ற நால்வரும் திருச்சி சிறப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்படுவார்கள் எனத் தெரிகிறது.

விளாத்திகுளத்தில் இருக்கும் ரவிச்சந்திரன் இன்று மாலைக்குள் மதுரை மத்திய சிறைக்கு வரலாம் என்று சொல்லப்படுகிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/tqvAPar
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*