60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை; சிக்கிய நபர் - தஞ்சை அதிர்ச்சி

0

தஞ்சாவூரில் 60 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. அந்த நபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை கொலை

தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே உள்ள புதிய நீதிமன்றம் பகுதியில் கடந்த 30 ஆம் தேதி இரவு 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ந்த சிலர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து தெற்கு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றினர்.

அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அப்போதே போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பெண்ணின் உடல் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இதில் அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது.

கொலை

மேலும் விசாரணையை தொடர்ந்த போலீஸ் சீனிவாசபுரம் சேவப்பநாயக்கன்வாரி தென் கரையைச் சேர்ந்த ராமசாமி மகன் சாஸ்திரி என்ற நபர் இச்சம்பவத்தில் ஈடுபட்டதை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, `தஞ்சாவூர் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்த 60 வயது மனநல குறைபாடு கொண்ட பெண்ணான அவர் அண்மையில் காணாமல் போனார்.

பெண்ணின் உறவினர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக கடந்த 28 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீதிமன்றம் பகுதியில் இறந்து கிடந்த பெண் காணாமல் போன பெண் என்பது தெரிய வந்தது. சாஸ்திரி என்ற இளைஞர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் அந்த பெண் கீழே விழுந்துள்ளார்.

கைது செய்த போலீஸ்!

இதில் தலையில் பலமாக அடிப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அறிந்த சாஸ்திரி அங்கிருந்து தப்பியோடி விட்டார். தொடர் விசாரணையில் ஈடுப்பட்டு வந்த போலீஸ் பாலியல் வன்கொடுமை செய்து பெண்ணை கொலை செய்த சாஸ்திரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் குற்ரத்தை அவர் ஒப்புக்கொண்டார்” எனத் தெரிவித்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/V1Nru9v
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*