சொத்துக்குவிப்பு வழக்கு: வேலூர் நீதிமன்றத்தில் மனைவியுடன் ஆஜராகிய அமைச்சர் பொன்முடி!

0

மிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவர் மனைவி விசாலட்சுமி இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துசேர்த்ததாகக் கூறி, அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதையடுத்து, இன்று காலை 11 மணியளவில் நடந்த விசாரணையில் தன் மனைவியுடன் அமைச்சர் பொன்முடி ஆஜரானார்.

அமைச்சர் பொன்முடி

வழக்கின் அடுத்த விசாரணை வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதால், நீதிமன்றத்திலிருந்து இருவரும் புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக, நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த தி.மு.க நிர்வாகிகள் சிலர், பொன்முடியை புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்ய வேண்டாம் என மறைத்தபடியே செய்தியாளர்களை தடுக்க முயன்றனர். செய்தியாளர்கள் தொடர்ந்து புகைப்படம், வீடியோ எடுத்ததால் காரில் ஏறி அமர்ந்த அமைச்சர் பொன்முடி, கோபமாக வெளியேறினார்



from மாவட்ட செய்திகள் https://ift.tt/eCO0Tjd
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*