``தற்போதைய நிதி ஆதாரமோ, நிதியை பெருக்குவதோ முக்கிய பிரச்னை அல்ல...” - பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

0

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். அதில் அவர் பேசும்போது, “குழந்தைகள் இல்லாமல் வருங்காலம் இருக்க முடியாது.

பிடிஆர். பழனிவேல் தியாகராஜன்

கர்ப்பிணிகள் நலனில் அக்கறை கொள்ளாமல் தவிர்த்தால், அது வருங்காலத்தையே சிதைத்து விடும். தமிழகத்தில் தற்போதைய நிதி ஆதாரமோ, நிதி பெருக்குவதோ முக்கிய பிரச்னை அல்ல.

ஒதுக்கப்படும் நிதியை நலத்திட்டங்கள் வாயிலாக மக்களிடம் முறையாக கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது தான் முக்கியம். பிற மாநிலங்களை காட்டிலும், தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதிகம் உள்ளன.

நிதி

மருத்துவ கட்டமைப்பில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று பல்வேறு படிப்பினைகளை நமக்கு வழங்கியுள்ளது.

மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட மருத்துவ கட்டமைப்பு சிறப்பாக இருப்பதாலேயே அதனை கடந்து வந்திருக்கிறோம். தமிழகத்தில் 1,000 பேருக்கு 4 மருத்துவர்கள் என்ற அடிப்படையில் இருக்கிறார்கள்.

மருத்துவம்

இதன் மூலம்,  பிற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருக்கிறது என்பது உறுதியாகிறது.” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/oYes16O
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*