மதுரை எய்ம்ஸ் பணிகள்: ``விரிவான அறிக்கையை தாக்கல் செய்க” - மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

0

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் மனுவில், "மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசால் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இதுவரை கட்டடம் கட்டும் பணி நடைபெறவில்லை. நிதியை ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு செய்திருந்தேன்.

மதுரை உயர்நீதிமன்றம்.

அப்போது 36 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிவடையும் என மத்திய அரசு தரப்பில் தெரிவித்ததால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தற்போது வரை தொடங்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற கூறியிருந்தார்.

இந்த கோரிக்கை கொண்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா என்பது குறித்து முடிவெடுக்க நீதிபதிகள் ரமேஷ், புகழேந்தி அமர்வு முன்பு பட்டியலிடப்பட்டது.

மதுரை எய்ம்ஸ்

அப்போது மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1,977.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான காலம் 5 வருடம் 8 மாதம் ஆகும். (மார்ச் 2021 முதல் அக்டோபர் 2026)

அதிக செலவு மற்றும் அதிக நேரத்திற்கான அனுமதியை மத்திய சுகாதாரத்துறை வழங்கி செலவினத்துறையின் பரிசீலனையில் உள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் எம்.பி.பி.எஸ் படிப்பு தற்போது ராமநாதபுரத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

மதுரை உயர்நீதிமன்றக் கிளை

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குநர் மற்றும் நிர்வாக துணை இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளனர்." என மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு, இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், "எவ்வாறு அக்டோபர் 2026-ல் பணிகள் முடிவடையும் என்பது குறித்த விரிவான அறிக்கையை மத்திய முதன்மைச் செயலர் தாக்கல் செய்யவேண்டும்" என உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/MDS1vPI
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*